ராமதாஸை கைது செய்ய ஜெயலலிதா திட்டம்?
சென்னை:
ரஜினி ரசிகர்கள்-பா.ம.கவினர் இடையே மோதல் தொடர்பாக ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் அவர் எந் நேரமும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமதாஸைக் கைது செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் நேற்று ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினர். இந் நிலையில் ராமதாஸைக் கைது செய்வதற்கான முன் ஏற்பாடுகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டால், அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுகுறித்து உளவுப் பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனால் அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு லாபம்ஏற்படும் என உளவுப் பிரிவு தெரிவித்தால் ராமதாஸ் கைதாவது உறுதி என்று காவல் துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் வைகோ விஷயத்தில் ஆனது போல, ராமதாசின் கைது அரசுக்கு எதிரான அலையை அலையைஏற்படுத்திவிடும் என்றால் கைது நடவடிக்கை தேர்தலுக்குப் பின்னர் வைத்துக் கொள்ளப்படும் என்கின்றனர் உயர்அதிகாரிகள்.
இந் நிலையில் தான் எந் நேரமும் கைது செய்யப்படலாம் என்று கருதும் ராமதாஸ் அதைச் சந்திக்கவும் தயாராகிவருகிறார்.
கைது இல்லை: டிஜிபி மறுப்பு
இதற்கிடையே ராமதாஸ் கைது செய்யப்பட மாட்டார் என டிஜிபி கோவிந்த் கூறியுள்ளார்.
இன்று நிருபர்களிடம் பேசிய அவர், ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைநடக்கிறது. இப்போதைக்கு ராமதாஸை கைது செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications