சோனியா மீதான விமர்சனம் விதிமீறல் அல்ல: அதிமுக
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள்தேர்தல் விதிமுறைகளை மீறியவை அல்ல என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக விளக்கமளித்துள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சோனியா காந்தி பற்றி தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக தனிநபர் விமர்சனம்செய்யப்பட்டுள்ளதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம்புகார் தெரிவித்தன.
இதையடுத்து விளக்கம் கேட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அதிமுகஎம்.பியும் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞருமான ஜோதி, தேர்தல் ஆணையத்திடம் 9 பக்க பதில் மனுவைத்தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், வெளிநாட்டில் பிறந்து இந்தியக் குடியுரிமையைப் பெற்றவரை விடஇந்தியாவில் பிறந்த ஒருவரே பிரதமராவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை மரியாதைக்குறைவான அறிக்கையாகவோ, அநாகரிகமான அறிக்கையாகவோ, தேசவிரோதமானஅறிக்கையாகவோ கருத முடியாது. மேலும் இது தனி நபரைக் குறி வைத்து தாக்கும் வகையில் கூறப்பட்டதாகவோ,வன்முறையைத் தூண்டும் வகையில் கூறப்பட்டதும் அல்ல.
அந்நியர் பிரதமராகலாமா என்பது குறித்த விவாதம் நாடு முழுவதும் நடந்து வருகிறது. மேலும் அதிமுகவின்தேர்தல் அறிக்கையில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, குணாதியங்கள் குறித்தோ எந்த விமர்சனமும்செய்யப்படவில்லை.
எனவே இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகாது என்றும், அதனால் அதிமுக மீதான புகார்மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications