ஏ.கே.மூர்த்தி இனி மத்திய அமைச்சராகவே முடியாது: இல.கணேசன் சாபம்
காஞ்சிபுரம்:
ஏ.கே.மூர்த்தியால் இனிமேல் மத்திய அமைச்சராகவே முடியாது என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர்இல.கணேசன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கணேசன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில்,பா.ம.கவில் சாதாரண கட்சித் தொண்டராக இருந்த ஏ.கே.மூர்த்திக்கு வாஜ்பாய் மத்திய அமைச்சர் பதவியைக்கொடுத்தார். அதிலும், ரயில்வே துறையையும் கொடுத்து கெளரவப்படுத்தினார்.
அப்படிப்பட்ட வாஜ்பாய்க்கு துரோகம் இழைக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியை உதறி விட்டுப் போனார்மூர்த்தி. இனிமேல் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவே கிடைக்காது, எம்.பியாக கூட தேர்வு பெறமாட்டார்.
அவர் இனிமேல் ரயில் நிலையங்களுக்குப் போனால் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கியாக வேண்டும் என்றார்கணேசன்.
காஞ்சி மடாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் ஏ.கே.மூர்த்தி. அப்படி இருக்கையில், ஏ.கே.மூர்த்தியை கடுமையாகசாடி இல.கணேசன் பேசியது அப்பகுதி பாமகவினரோடு பாஜகவினருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரானவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெயரைப் பெற்றவர்மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 50 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு தமிழகத்துக்கு ஏகப்பட்ட புதியரயில்களையும், ரயில்வே திட்டங்களையும் கொண்டு வந்தார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications