எஸ்.எஸ்.எல்.சி தேர்வு: ஆள் மாறாட்டம் செய்த 2 மாணவர்கள் கைது
திருவண்ணாமலை:
பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதிய 2 பேரை ஆரணி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வின்போது,பெரியபாளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்குப் பதிலாக கனியம்பாடி கிராமத்தைச்சேர்ந்த விமல் (21) என்பவர் தேர்வு எழுதியதை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து போலீஸார் விமலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனனைத் தேடிவருகிறார்கள்.
இதேபோல் ஆரணியில் உள்ள செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில், கொங்கம்பட்டியைச் சேர்ந்த முருகன்என்பவருக்குப் பதிலாக அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (19) என்ற மாணவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்ததை பறக்கும் படையினர் கண்டு பிடித்தனர்.
போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட முருகனைத் தேடி வருகின்றனர்.
மேலாரணி அரசு உயர் நிலைப் பள்ளியில் காப்பி அடித்த மாணவர் ஒருவரை பறக்கும் படை கண்டுபிடித்து தேர்வுமையத்திலிருந்து வெளியேற்றியது
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications