வட-கிழக்கில் சுயாட்சி நிர்வாகம்: புலிகள் திட்டவட்டம்
கொழும்பு:
வட-கிழக்கு இலங்கையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட இடைக்கால நிர்வாகத்தை அமைக்கும்எங்களது திட்டத்தை ஏற்றுக் கொண்டு பேச்சு நடத்த புதிய அரசு முன் வர வேண்டும் என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர்.
இந்தத் திட்டத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஏற்கனவே நிராகரித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இப்போது அவரது கட்சியே பிரதமர் பதவியைப் பிடித்துள்ள நிலையில்,புலிகளின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தங்கள் ஆதரவுடன் தேர்தலில் வென்ற தமிழ் தேசியக் கூட்டணியின் 22 எம்.பிக்கள் மூலமாக புலிகள்இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
இந்த எம்.பிக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட-கிழக்கு இலங்கையில் புலிகளின் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கும் திட்டத்துடன்மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை புதிய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
1.9 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 12.5 சதவீதம் வசிக்கும் தமிழ் மக்களின்ஏகோபித்த பிரதிநிதிகளாக புலிகளை இந்த அரசு அங்கீகரிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சந்தித்து வரும் துன்பங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்மேலும் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தையை அரசு தொடங்க வேண்டும் என்று அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
நேற்றிரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய சந்திரிகா, விடுதலைப் புலிகளுடன் மீண்டும்பேச்சுவார்த்தை நடத்த அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார்.
ஆனால், புலிகளின் அடிப்படைக் கோரிக்கையான சுயாட்சி அதிகாரம் கொண்ட இடைக்காலநிர்வாகத் திட்டத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதை சந்திரிகா விளக்கவில்லை.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications