விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி, ப.சி.
வேலூர்:
பொடா வழக்கிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில்கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
முன்பு இதே வேலூர் சிறையில் இருந்த எனது தம்பி வைகோவை காண வந்தேன். வைகோவையும் மற்றவர்களையும் சிறையில்அடைத்தது சரியா என்று எதிர்க்கட்சிகளெல்லாம் சேர்ந்து குரல் கொடுத்ததால் பொடா மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அவர்களைக் கைது செய்தது தவறு என்று அந்த குழு அறிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு இந்தக் கூட்டத்தில் பேசவந்துள்ளேன்.
இந்த கூட்டம் தானாக விரும்பி வந்துள்ள கூட்டமாகும். இப்போதுள்ள நாட்டின் நிலைமை குறித்து ஆராய்ந்து திமுகவுக்குவாக்களிக்க வந்துள்ள கூட்டம் என்றார் கருணாநிதி.
ப.சிதம்பரம் கேள்வி
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா மறு ஆய்வுக் குழு விடுதலை செய்துள்ளது பாராட்டுக்குரியது என்று காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், வைகோ மீதான பொடா வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று பொடா மறு ஆய்வுக் குழுகூறியுள்ளது. இதுபாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.
இந்த தீர்ப்பையடுத்து, பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.
வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுமாற அதிமுகவிடம் பா.ஜ.க. வேண்டுகோள் விடுக்குமா? அந்த வேண்டுகோளைஅதிமுகஏற்குமா? அப்படி ஏற்காவிட்டால் அதிமுகவின் முடிவை பாஜக ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பாஜக விளக்க வேண்டும் என்றுகேட்டுள்ளார் சிதம்பரம்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications