பாமகவினரை ஏன் அடிக்கவில்லை?: ராதாரவி ஆத்திரம்
மதுரை:
மதுரைக்கு வந்து பாமக தொண்டர்கள் ரஜினி ரசிகர்களை தாக்கியிருக்கிறார்கள். அவர்களை திருப்பி அடிக்காமலாவிட்டீர்கள் என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பினார்.
மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸுக்கு ஆதரவாக ஜெய்ஹிந்துபுரத்தில் நடந்தபொதுக்கூட்டத்தில் ராதாரவி பேசினார்.
அவரது பேச்சு விவரம்:
மதுரை மண் வீரத்திற்குப்பெயர் போனது. இந்த மண்ணுக்கு வந்து, இந்த மண்ணின் மைந்தர்களான ரஜினிரசிகர்களை பாமகவினர் தாக்கியுள்ளனர். அவர்களை நீங்கள் திருப்பி அடிக்காமல் விட்டது எனக்கு ஆச்சரியத்தைஅளிக்கிறது.
பாமகவினர் ரஜினியை மட்டும் எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்த சினிமாக்காரர்களையே எதிர்க்கிறார்கள். எனவேஅனைத்து சினிமா ரசிகர்களும் பாமகவை புறக்கணிக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்ராதாரவி.
முன்னதாக அதிமுக வேட்பாளர் போஸ் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மதுரையில் திறந்த ஜீப்பில்பிரச்சாரத்துக்குச் சென்றபோது சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. போஸ் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தால்அதிமுக தொண்டர்கள் கூட பிரச்சாரத்துக்கு வரவில்லை.
இதனால் கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிப் போய்விட்டார்.இதையடுத்து தன்னந்தனியே போஸ் ஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.
அழகாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்துக்கு சென்றபோது மக்களிடம் வரவேற்பே இல்லை. அவரும்டிரைவரும் மட்டுமே ஜீப்பில் சுற்றிச் சுற்றி வந்தனர். தன்னை யாருமே திரும்பிக் கூட பார்க்காததால் அவரும்பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வீடு திரும்பிவிட்டார்.
ஜெ.வுக்கு ராமதாஸ் கண்டனம்:
இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், பாமகவை முன்பு ஜாதிக் கட்சிஎன்றார் ஜெயலலிதா. இப்போது வன்முறைக் கட்சி என்கிறார். பாமகவின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில்ஜெயலலிதா வாய்க்கு வந்தமாதிரி பேசுகிறார்.
மக்களுக்கு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை. ஆனால், மற்றவர்களிடம் குறைகண்டுபிடிப்பதாக நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டுகிறார் என்று கூறியுள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications