பொடா வழக்கில் வைகோ விடுவிப்பு: மறுஆய்வு குழு பரபரப்பு தீர்ப்பு
டெல்லி:
விடுதலைப்புலிகளை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது தவறு இல்லை என்று பொடா மறுஆய்வுக்குழு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகபேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சி பிரமுகர்கள் கணேசன், அழகு சுந்தரம், கணேசமூர்த்தி,வீரஇளவரசன், பூமிநாதன், மணியம், சிவந்தியப்பன், நாகராஜன் ஆகிய 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வைகோ உள்பட மதிமுகவினர் 9 பேரும் தங்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது தவறு என்று பொடாமறுஆய்வுக் குழுவிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த பொடா மறுஆய்வுக் குழு பொடா வழக்கில் இருந்து வைகோவை விடுவித்துபரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பு விவரம் வருமாறு:
விடுதலைப்புலிகளை ஆதரித்து வைகோ பேசியது, பொடா சட்டம் 21(3) பிரிவின் அதிகார வரம்புக்குள் வராது.நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
வைகோ எவ்வித வன்முறையிலோ, தீவிரவாதத்திலோ ஈடுபடவில்லை. ஈழத் தமிழர்களுக்காக வாய் மொழியாகஆதரவு அளிப்பது என்பது விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக ஆகாது.
நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான் என்று நாடாளுமன்றத்தில் வைகோ பேசியது, விவாதத்தின் போதுஅவருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடியாகக் கூட இருந்திருக்கலாம்.
விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல்களை ஆதரிக்கும் விதத்திலோ அல்லது ஊக்கப்படுத்தும் விதத்திலோஅவரது பேச்சு அமையவில்லை.
தமிழர் என்ற உணர்வோடு இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது விடுதலைப்புலிகளைஆதரிப்பதாகாது.
ஈழத் தமிழர்களுக்காக வைகோ பேசியதை தேவை இல்லாமல் விடுதலைப்புலிகளுடன் இணைத்துப் பார்க்ககூடாது. இரண்டும் வேறு வேறு பிரச்சினைகள். இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக போராடும் இயக்கங்களில்விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒன்று.
எனவே வைகோ பேசியது பொடா சட்டப்படி குற்றமாகாது. இந்த உத்தரவு மதிமுகவினர் 8 பேருக்கும் பொருந்தும்.இவர்கள் அனைவருக்கும் எதிராக பொடா நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரநடவடிக்கை எடுக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி சஹார்யாதீர்ப்பில் கூறி இருக்கிறார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications