ஜெயா டிவியின் இரு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
சென்னை:
கருணாநிதி உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சியினரையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ஜெயா டிவியின் இரு நிகழ்ச்சிகளையும்உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என திமுக கோரியுள்ளது.
நடிகரும் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ். சந்திரன் வழங்கும் அரசியல் கெளண்ட்டென் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ. ராதாரவி-குண்டுக் கல்யாணம்- வாசுகி உள்ளிட்டவர்கள் நடிக்கும் ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் எதிர்க் கட்சித்தலைவர்களை மிகக் கேவலமாக விமர்சித்து வருகின்றன.
கருணாநிதியாக நடிக்கும் குண்டுக்கல்யாணத்தை ராதாரவி, அவன்- இவன் என்று விமர்ச்சிறார். அதே போல ஆற்காடுவீராசாமியாக வரும் கேரக்டர் காது கேளாதவராகக் காட்டப்படுகிறார். அவரை செவிடன் என்று விமர்சிக்கிறது அந்த நிகழ்ச்சி.
எஸ்.எஸ். சந்திரனின் கெளண்ட் டெளன் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு சினிமாவை எடுத்துக் கொண்டு அந்தக் கதாபாத்திரங்களுடன்எதிர்க் கட்சித் தலைவர்களை ஒப்பிட்டு விமர்சிக்கிறது.
இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு திமுக அனுப்பியுள்ள புகாரில், அதிமுக எம்.பி. தினகரன் தலைமையில் இயங்கும் ஜெயா டிவிஎதிர்க் கட்சியினரை மிக அசிங்கமாக விமர்சிக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கைகுறித்து சிறிதும் நாகரீகமின்றி ஜெயா டிவி நிகழ்ச்சிகள் இரண்டும் விமர்சிக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பதோடு, அதை நடத்தும் எம்.பியான எஸ்.எஸ். சந்திரன் மற்றும் எம்.எல்.ஏவான ராதாரவிஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு இல்லை:
அதே போல கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்கு தமிழக காவல்துறை போதிய பாதுகாப்புகொடுப்பதில்லை என்று தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்குஅனுப்பியுள்ள கடிதத்தில்,
திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். ஆனால் மிகவும்சொற்ப எண்ணிக்கையில்தான் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கருணாநிதி இசட் பிளஸ் பிவுபாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவர். அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழகஅரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிற தலைவர்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications