இலங்கை மோதல்: ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்வு
கொழும்பு:
கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் கருணாவின் படையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ளமோதலையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர்.
பல இடங்களில் கருணாவின் படையினர் பின் வாங்கி வருகின்றனர்.
இந்த மோதலில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் உள்பட 2பொது மக்களும் அடக்கம்.
மட்டக்களப்பின் வட பகுதிகளில் தங்களது நிலைகளில் இருந்து பின் வாங்கிவிட்ட கருணாவின் படைகள்இப்போது முக்கிய நெடுஞ்சாலையின் தென் பகுதியில் கூடி வருகின்றனர்.
அவர்களை நோக்கி புலிகளின் படை முன்னேறி வருகிறது. இதற்கிடையே மட்டக்களப்பை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளஇலங்கை ராணுவப் படைகள், புலிகளுக்கும் கருணாவின் படையினருக்கும் இடையே சிக்கியுள்ளன.
இதனால் தங்கள் மீது இரு தரப்பினரும் தாக்கலாம் என ராணுவம் அச்சம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கைராணுவத் தளபதி லயோனல் பாலகல்லே மற்றும் கடற்படைத் தளபதி தயா சந்தகிரி ஆகியோர் மட்டக்களப்பின்அருகே உள்ள ராணுவத் தளத்துக்குச் சென்று நிலைமை நேரில் ஆராயந்தனர்.
இதற்கிடையே மோதல் தீவிரமடைந்துள்ளதையொட்டி ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டக்களப்பை விட்டுவெளியேற ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
பள்ளிகளிலும், அரசு அலுவக கட்டடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்களுக்கு உணவுவழங்குவதற்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்து வருகிறது.
இந் நிலையில் புலிகளுக்கும் கருணா தரப்புக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நார்வே அமைதிக் குழு வருத்தமும்கவலையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே புலிகளுக்குள் நடக்கும் இந்த மோதல் விவகாரத்தை நார்வே நாட்டின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்போவதாக இலங்கையின் புதிய அரசு கூறியுள்ளது.
இது விடுதலைப் புலிகள் எங்களுடன் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்பாட்டுக்கு எதிரான மோதல் என்பதால்இதில் தலையிட்டு சண்டையை நிறுத்துமாறு நார்வேயிடம் கேட்டுக் கொள்ளப் போகிறோம் என இலங்கைராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முப்படைகளுக்கும் அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மோதல் நடக்கும் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications