நீலகிரி கலக்கல்: மாஸ்டரை பாராட்டியே கவிழ்க்கும் பிரபு
உதகமண்டலம்:
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மாஸ்டர் மாதனை திட்டாமல், விமர்சிக்காமல், வாழைப்பழத்தில்ஊசி ஏற்றுவது மாதிரி பாராட்டியே கவிழ்த்து வருகிறார் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஆர். பிரபு
பிரபுவின் பிரசார உத்தி வாக்காளர்களை கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சி வேட்பாளரையும், பிற தலைவர்களையும் கடுமையானவார்த்தைகளால் சாடாமல் மிகவும் மென்மையாக அவர்களது பலவீனத்தைக் கூறி வாக்கு சேகக்கிறார் பிரபு.
ஒரு பிரசாரக் கூட்டத்தில் பிரபு பேசுகையில், இந்தத் தொகுதியின் எம்.பியாக மாஸ்டர் மாதன் இருந்துள்ளார். ஆனால் அவரால்தொகுதிக்கு ஒரு நல்லதையும் செய்ய முடியவில்லை. அதற்காக அவரை குற்றம் சொல்லக் கூடாது.
முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. எனவேஅவரால் நாடாளுமன்றத்தில் பேசவே முடியாமல் போய்விட்டது. தமிழிலாவது பேசியிருக்கலாம், அதையும் அவர்செய்யவில்லை.
தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதற்காக அவரை யாரும் குறை சொல்ல வேண்டாம். அவரது நிலைமை அப்படி.உலக விவரமே தெரியாத ஆசாமி அவர். எனவே நானும் அவரை விமர்சிக்க மாட்டேன். அவர் எனது நல்ல நண்பர்.
இந்தத் தொகுதியின் எம்.பியாக நான் பலமுறை இருந்தபோது செய்த திட்டங்களை, நலப் பணிகளை மக்கள் அறிவார்கள். எனவேஇந்த முறையாவது மாஸ்டர் மாதனுக்குப் பதில் என்னைத் தேர்ந்தெடுத்தால் தொகுதிக்கு பலன் கிடைக்கும் என்று கூறிக் கொள்ளவிரும்புகிறேன்.
இவ்வாறு மாஸ்டரை பாராட்டியே கவிழ்த்து வருகிறார் பிரபு.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications