ரஜினியை சமாதானப்படுத்த ப.சிதம்பரம் முயற்சி?
திருச்சி:
திமுகவின் சார்பில் நடிகர் ரஜினிகாந்த்துடன், காங்கிரஸ் ஜனநாயக பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் பேசி வருவதாகத்தெரிகிறது. இதை ப.சிதம்பரமே சூசகமாக தெரிவித்தார்.
பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. இந்த மோதலுக்கு மகுடமாக மதுரையில்ரஜினிரசிகர்கள் மீது பாமகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து விரைவில் ரஜினி முக்கிய முடிவை அறிவிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாமகமட்டுமல்லாது திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் ரசிகர்களை திருப்பி விடலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து ரஜினியுடன் சமாதானம் திமுக தலைமை சமாதானம் பேச முடிவு செய்துள்ளது. ரஜினியிடம் பேசுமாறுப.சிதம்பரத்தை கருணாநிதி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதை ஏற்று ரஜினியுடன் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
இந் நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரத்திடம் ரஜினி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குபதிலளித்த சிதம்பரம்,
மதுரை சம்பவம் யாருடைய மனதிலும் கசப்புணர்வை ஏற்படுத்தி விடக் கூடாது. இந்த சம்பவத்தை அப்படியே மறந்து விடவேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒன்று மட்டுமே எங்களது கூட்டணியின் இலக்காக உள்ளது.
இதை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளேன். அவர்களும் எனது பேச்சை கேட்டுக் கொண்டுள்ளனர். விரைவில் சுமூகமுடிவு காணப்படும்.
இலங்கையில் ரணில் தோல்வியடைந்து அதிபர் சந்திரிகாவின் கட்சி பிரதமர் பதவியைப் பிடித்தது பெரும் பின்னடைவைஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளால் நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். தமிழர் நலனில் அக்கறை கொண்ட யாரும்புலிகளுக்குள் பிளவு ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள்.
வைகோ மீதான பொடா வழக்கை உடனடியாக வாபஸ் பெற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். பொடா மறு ஆய்வுக்குழுவின் தீர்ப்பு இறுதியானதல்ல என்று இல.கணேசன் பேசியிருக்கிறார். இந்தக் குழுவின் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளைக்கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முதலில் அந்தத் தீர்ப்பை கணேசன் படித்துப் பார்த்துவிட்டுப்பேசுவது நல்லது என்றார் சிதம்பரம்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications