ஜீவஜோதி-அண்ணாச்சி ராஜகோபால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
பிரபல ஹோட்டல் அதிபர் சரவண பவன் ராஜகோபால் சம்பந்தப்பட்டுள்ள ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ்சாந்தகுமார் கொலை வழக்கு, கடத்தல் வழக்கு ஆகியவற்றில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாகஇருந்தது. ஆனால், இன்று மீண்டும் 26ம் தேதிக்கு தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.
அண்ணாச்சி ராஜகோபால் சில ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைஆள் வைத்துக் கடத்திச் சென்று கொலை செய்து கொடைக்கானல் மலையில் இருந்து உருட்டி விட்டதாக அவர் மீதுஜீவஜோதி சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் ராஜகோபால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது அடியாட்களும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு பூவிருந்தவல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மேலும், ஜீவஜோதியைக் கடத்தியதாகவும் ஒரு வழக்கு ராஜகோபால் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த இருவழக்குகளிலும் சமீபத்தில் விசாரணை முடிவடைந்து இறுதியாக வக்கீல்கள் வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதி செல்வக்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார். இன்று இரு வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்படுவதாகஇருந்தது.
இதையடுத்து சிறையிலிருந்து ராஜகோபால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ஆனால் ஜீவஜோதிவரவில்லை. இந் நிலையில் இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றைப்படித்துப் பார்க்க நிறைய அவகாசம் தேவைப்படுவதாகவும், எனவே வருகிற 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்என்றும் நீதிபதி செல்வக்குமார் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராஜகோபால் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான பேர் கூடியிருந்தனர்.












Click it and Unblock the Notifications