செக்ஸ் டார்ச்சர்: கணவனைக் கொன்ற இரு மனைவிகள்
திருப்பத்தூர்:
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவரை அவரது இரு மனைவிகளும், மகனும் சேர்ந்து கொலைசெய்தனர். இவருக்கு மொத்தம் 4 மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பாலன் (55), நகர சுத்தித் தொழிலாளியாக இருந்துவந்தார். இவருக்கு செல்வகுமாரி (45), வள்ளியம்மாள் (35), புஷ்பலதா (48) என மூன்றுமனைவிகள்.
இதில் புஷ்பலதாவின் தங்கை பப்பியின் (40) கணவர் சமீபத்தில் காணாமல் போனதையடுத்து,பப்பியையும் மிரட்டி தனது தாராமாக்கிக் கொண்டார் பாலன். மேலும் பப்பியை செக்ஸ்ரீதியில்பயங்கர தொல்லைக்கும் ஆட்படுத்தி வந்துள்ளார் பாலன்.
ஒரு கட்டத்தில் டார்ச்சர் அதிகமாகவே, பாலனைக் கொலை செய்துவிட முடிவு செய்துள்ளார் பப்பி.தனது மகன் துரையிடம் (21) பாலனைத் தீர்த்துக் கட்ட சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவர்தனது நண்பன் விஜய்குமார் (30) என்பவருடன் சேர்ந்து பாலனைக் கொல்ல திட்டம் தீட்டினார்.
இந்தக் கொலைத் திட்டத்துக்கு புஷ்பலதாவும் உதவி செய்ய முன் வந்தார். தனது வீட்டில் கணவர்தங்கும் இரவு நேரத்தில் வந்து கொலையைச் செய்யுமாறு யோசனை கூறியுள்ளார் புஷ்பலதா.
இதையடுத்து இரவில் தூங்கிக் கொண்டிருந்த பாலனை துரையும் விஜய்குமாரும் சேர்ந்து கத்தியால்கழுத்தை அறுத்துக் கொல்ல, புஷ்பலதாவும் பப்பியும் கொலைக்கு துணையாக உடன்இருந்துள்ளனர்.
பின்னர் பாலனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி பக்கத்து கிராமத்தில் உள்ள விவசாயக்கிணற்றில் வீசினர்.
கணவரைக் காணாமல் மற்ற இரு மனைவிகளும், அவர்களது குழந்தைகளும் தேட ஆரம்பிக்கவேஅவர்களின் சந்தேகம் புஷ்பலதா, பப்பி மற்றும் துரை மீது விழுந்தது.
இதையடுத்து கிராம அதிகாரியிடம் அவர்கள் புகார் தர, குற்றத்தை ஒப்புக் கொண்டு அவர்கள்சரணடைந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும், விஜய்குமாரும் கைதுசெய்யப்பட்டனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications