மலைச்சாமியின் "அட்ரா சக்கை" அறிக்கை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் தொகுதியில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏஸ். அதிகாரியும் அதிமுக எம்.பியுமான மலைச்சாமி,இந்த முறை தனக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை என்பதற்கு வித்தியாசமான காரணத்தைக் கூறி வருகிறார்.
சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிமுகவில் கொடி கட்டிப் பறந்தார் மலைச்சாமி. ஆனால், இந்தமுறை சசிகலாவின் ஆட்கள் பலருக்கும் ஆப்பு வைத்துவிட்டார் ஜெயலலிதா. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில்ஒருவர் தான் மலைச்சாமி.
ஆனாலும், சோகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராமநாதபுரத்தில் டேரா போட்டு தேர்தல் வேலை பார்க்கமுயன்று வருகிறார் மலைச்சாமி. ஆனால், அவரை ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்து வருகிறார் ராமநாதபுரம்தொகுதியின் பொறுப்பாளரான அமைச்சர் தளவாய் சுந்தரம்.
இதனால் பெரும்பாலான ராமநாதபுரம் நேரம் கட்சி ஆபீசிலேயே உட்கார்ந்து பிரச்சாரம் செய்கிறார் மலைச்சாமி!.அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒப்புக்கு சிரித்துப் பேசி வருகிறார்.
இந் நிலையில் தன்னைப் போலவே சீட் கிடைக்காத அதிமுகவினருக்கு ஆறுதல் கூறி அவர் வித்தியாசமானஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அம்மா நமக்கு சீட் தரவில்லையே என்று யாரும் வருத்தப்படக் கூடாது. ஒவ்வொரு முறையும் அம்மாஎதையாவது செய்தால் அதில் புதுமை இருக்கும், விஷயம் இருக்கும்.
இந்த முறை புதிய முகங்களுக்கு அம்மா வாய்ப்பளித்துள்ளார். அதிலும் அவரது தாயுள்ளத்தையே நாம் காணமுடியும். அதாவது, பானையில் கொஞ்சம்தான் சாதம் உள்ளது. தனக்கு முன் அமர்ந்திருக்கிற குழந்தைகளுக்குத்தான்ஒரு தாயால் முதலில் அந்த சாதத்தைக் கொடுக்க முடியும்.
அதை விடுத்து, கடைசி வரிசையில் உள்ள குழந்தைகளுக்கு முதலில் கொடுத்து விட்டு, முன்னாள் உள்ளகுழந்தைகளுக்கு பின்னால் கொடுப்பது நியாயமாக இருக்காது அல்லவா? அப்படித்தான் அம்மாவும் தனதுகுழந்தைகளுக்கு சீட் கொடுத்துள்ளார்கள் என்று போகிறது மலைச்சாமியின் அறிக்கை.
அடுத்ததாக அம்மா சோறு போடுங்கங்கம்மா... என்று மலைச்சாமி அறிக்கை விட்டாலும் ஆச்சரியமில்லைஎன்கின்றனர் மலைச்சாமியின் நிலையைக் கண்டு மனதார சிரிக்கும் அதிமுகவினரே.
இன்னும் ஐ.ஏ.எஸ். நினைப்பிலேயே இருக்கும் அவர் தொகுதியில் தொண்டர்களை மதித்ததே கிடையாது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் தான் அவருக்கு சீட் கிடைக்காததில் தொண்டர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி.












Click it and Unblock the Notifications