ஜெவிடம் படாதபாடு படப் போகிறது பா.ஜ.க: ப. சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

திருவாடானை:

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜகவை மிரட்டியே காரியம் சாதிக்க பெரும் திட்டம் வைத்திருக்கிறார்ஜெயலலிதா என்று சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம்கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்அவர் பேசுகையில்,

தமிழகத்தில் ஜெயலலிதா தனித்து விடப்பட்டுள்ளார். வேறு வழியில்லாமல்தான், அவர் பாஜகவுடன் கூட்டணிவைத்துள்ளார்.

ஆனால் தேர்தலுக்குப் பின் பாஜக படாதபாடு படப் போகிறது. பாஜகவினரை மிரட்டியே, பேரம் பேசியே பலகாரியங்களை சாதிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே பாஜகவுடன் ஒத்துப் போவது போலஅவர் நடிக்கிறார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பும், வெறுப்பும் ஆழமாகப்பரவிவிட்டது. அனைத்துப் பிரிவு மக்களையும் அவர் தண்டித்துள்ளார், வஞ்சித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் மீது 120க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

அத்தனை வெறுப்பும், விரக்தியும், ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டுக்களாக மாறி பாடம் கற்பிக்கப் போகின்றன.அதிமுக ஆட்சியும் விரைவில் வீழும் என்றார் சிதம்பரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+