டி.வியில் தேர்தல் விளம்பரம்: மூவர் குழு நியமனம்
சென்னை:
தனியார் மற்றும் கேபிள் டிவிக்களில் தேர்தல் விளம்பரம் செய்வதற்கு அனுமதி அளிக்கவும், அந்தவிளம்பரங்களைத் தணிக்கை செய்யவும் இணைத் தலைமை தேர்தல் அதிகாரி குமார் ஜெயந்த் தலைமையில் மூவர்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் சென்னை மாவட்ட ஆட்சியர் ராஜாராம், சென்னை தொலைக்காட்சி தலைமை நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சபரிநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக் குழுவின் முடிவை எதிர்த்து கொடுக்கப்படும் புகார்களை விசாரிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய்சாரங்கி தலைமையில் இன்னொரு மூவர் குழுவையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இக்குழுவில் சிறப்புத்தேர்தல் பார்வையாளர் ஏ.கே.பாசு, சென்னை அகில இந்திய வானொலி துணை இயக்குநர் பாலசுப்ரமணியன்ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந் நிலையில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்றுநடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பொது பார்வையாளர்கள், ஒரு செலவுக் கணக்குகண்காணிப்பாளர் உள்பட 3 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி தமிழகத்தில்உள்ள 39 தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 118 தேர்தல் பார்வையாளர்களும் இன்று சென்னை வந்துசேர்ந்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி தலைமையில் தேர்தல்அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சிறப்பு பார்வையாளர் ஏ.கே.பாசுவும்பங்கேற்கிறார்.
தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்துக்குப் பின்னர்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்வார்கள்.
தமிழகத்துக்கு தேர்தல் பார்வையாளர் 20-ம் தேதி (நாளை) முதல் மே 14ம் தேதி வரை அந்தந்த தொகுதியிலேயேதங்கி இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications