நகைக் கடையில் துப்பாக்கி முனையில் ரூ. 40 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை புறநகரில் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் ரூ. 40 லட்சம் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை வேளச்சேரி அருகே உள்ளது பள்ளிக்கரணை. இங்கு கிருஷ்ணா தங்க மாளிகை என்ற நகைக் கடைஉள்ளது. நேற்றிரவு 7.30 மணிக்கு 3 பேர் கடைக்கு வந்துள்ளனர். நகை வாங்க வேண்டும் என்றுகடைக்காரர்களிடம் கூறியுள்ளனர்.
சிறிது நேரம் நகைகளைப் பார்ப்பது போல நடித்த அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துகடை உரிமையாளர் சென்னாராம், அவரது தம்பி சுக்காராம், வாடிக்கையாளர் முருகன் ஆகியோரை மிரட்டினார்.
பின்னர் இன்னொரு நபர் கடையின் லாக்கர் சாவி எங்குள்ளது என்று சென்னாராமிடம் கேட்டார். அவர் கொடுக்கமறுக்கவே அவரை சரமாரியாக அடித்த அந்த நபர் பின்னர் சாவியைப் பிடுங்கினார்.
லாக்கர் அறையைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்கம், 9 கிலோ தங்க நகைகள், 35கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் ஒருஆட்டோவில் ஏறித் தப்பினர்.
கொள்ளையர்கள் போன பின்பு சென்னாராம் போலீஸில் புகார் கொடுத்தார். செங்கை கிழக்கு மாவட்ட கூடுதல்கண்காணிப்பாளர் மகேந்திரகுமார் ரத்தோட் கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் வந்து விட்டாலே சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பதுவழக்கமாகி விட்டது. அதிலும் சமீப காலமாக புறநகர்ப் பகுதிகளில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications