பாலகங்காவை காக்க வெளியான அவசர அரசாணை
சென்னை:
மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் பாலகங்கா மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவரதுவேட்பு மனு தள்ளுபடி ஆவதைத் தடுக்க, அந்த வழக்குகளை அவசரமாக ரத்து செய்து ஆணைபிறப்பித்துள்ளது தமிழக அரசு.
இதை எதிர்த்து வழக்குத் தொடரப்படவுள்ளது.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தபோதுசென்னையில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பாலகங்காஉள்ளிட்ட 45 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இதே போல அவர் மீது இன்னொரு கிரிமினல் வழக்கும் விசாரணையில் இருந்தது. இவைஇரண்டுமே எழும்பூர் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் கடந்த மாதம் ஒரு வழக்கை அரசு வாபஸ் பெற்றது. இன்னொரு வழக்கு கடந்த 19ம்தேதி வாபஸ் பெறப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் வேட்பு மனு தள்ளுபடிஆகலாம் என்பதால் வழக்கை வாபஸ் பெற்று அவரச ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
வழக்கை வாபஸ் பெறும் இந்த அரசாணையை அரசு வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் ரோசைய்யாவிடம்நேற்று தாக்கல் செய்தார். இதை ஏற்ற மாஜிஸ்திரேட், பாலகங்கா உள்ளிட்டவர்கள் மீதானவழக்குகளை வாபஸ் பெற அனுமதி தந்தார்.
இதனால் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாலகங்கா விடுவிக்கப்படுவதாகவும், வழக்குதொடர்பான ஆவணங்களை அழித்துவிடவும் உத்தரவிட்டார்.
பாலகங்காவை காப்பதற்காக அரசு பிறப்பித்த இந்த அவசர ஆணையை எதிர்த்து வழக்கறிஞர்கண்ணதாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications