அரவாணிகளின் கூவாகம் திருவிழா தொடக்கம்
விழுப்புரம்:
அரவாணிகளின் சித்திரை திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரவாணிகள் மத்தியில் மட்டுமே பிரசித்தி பெற்றிருந்த இந்தக் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இப்போதுமற்றவர்களையும் ஈர்த்து வருகிறது. அரவாணிகளைப் பார்க்கவும் அவர்களின் வழிபாட்டைப் பார்க்கவும்தமிழகம் முழுவதும் இருந்தும் இளைஞர்களும், பெரிசுகளும் திருவிழாக் காலங்களில் இங்கு குவிந்துவிடுகின்றனர்.
மேலும் அரவாணிகளில் பெரும்பாலானவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால், இந்த விழாவைதமிழக நலத்துறையும் பல சமூக நல அமைப்புகளும் எய்ட்ஸ் மற்றும் முறைகேடான உடலுறவின்அபாயங்கள் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பயன்படுத்தி வருகின்றன.
இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலேயே பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்களும் இந்தகூவாகம் திருவிழாவின்போது நடத்தப்படுகின்றன.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்னமியன்று விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கானதிருவிழாவும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி ஏராளமான அரவாணிகள் கூத்தாண்டவர்கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கூத்தாண்டவரை திருமணம் செய்து, அவர் சார்பில் அரவாணிகள்தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி மே 7ம் தேதி நடக்கிறது. தாலி கட்டிக் கொண்ட பின்னர் தாலியை அறுத்து விட்டுஅரவாணிகள் கதறி அழுது கூத்தாண்டவரை வணங்கி வழிபடுவார்கள்.
விழாவையொட்டி லட்சக்கணக்கான அரவாணிகள் கூவாகத்தில் கூடுவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்புஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் இப் பகுதியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக அரவாணிகளும், உள்ளூர் மக்களும் புகார் கூறுகின்றனர்.
திருவிழாவையொட்டி அரவாணிகள் பங்கேற்கும் அழகிப் போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications