ஆண்டாளுடன் ஜெயலலிதாவை ஒப்பிடுவதா?: ஓ.பிக்கு ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் கடும் கண்டனம்
ஸ்ரீபெரும்புதூர்:
ஆண்டாளை ஜெயலலிதாவுடன் போய் ஒப்பிட்டுப் பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர் செல்வத்தை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் ஜீயர்கோரியுள்ளார்.
ராகுல் காந்தியின் பேச்சு கண்ணீரை வரவழைப்பதாக, தான் கூறியதைக் கிண்டலடித்த முதல்வர்ஜெயலலிதாவை மிகக் கடுமையாகத் தாக்கி அறிக்கை விட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
அதில் பிள்ளை குட்டி பெற்றிருந்தால் உணர்ச்சிகள் தெரியும், குழந்தை பெறாத மலடுகளுக்குஇதெல்லாம் புரியாது என்று ஜெயலலிதாவைத் தாக்கினார்.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மூலமாக பதில் தந்தது அதிமுக. பன்னீர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவை, கலியுக ஆண்டாளாக வாழ்ந்து வரும் எங்கள்தலைவியை, வராது வந்த மாமணியை, காவியத் தலைவியை மலடி என்றும் கருணாநிதிவிமர்சித்துள்ளார். அவருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு வைணவ சமூகத் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்துஸ்ரீபெரும்புதூர் ஜீயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆழ்வார்களில் ஒப்பற்றவர்களாகத்திகழ்ந்த ஆண்டாள், இறைவனையே திருமணம் செய்து கொள்வேன் என்று வாழ்ந்து இறைவனோடுகலந்தார்.
அவரை முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம் மலடு என்ற விஷயத்தில் அரசியல் தலைவருடன்ஒப்புமைப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது என் கண்களில் ரத்தத்தை வரவழைத்துவிட்டது.
ஆன்மீகச் செம்மல்களை அரசியல்வாதிகளுடன் இணைத்துப் பேசுவது கடுமையாககண்டிக்கத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை அரசியல்வாதிகளுடன் இணைத்து அமைச்சர் பன்னீர் செல்வம்பேசியுள்ளார். இது அநாகரீகமான, கண்டனத்துக்குரிய செயல். அவரை அமைச்சர் பதவியிலிருந்துடிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவரை யாரும் எந்தக் கட்சியிலும் சேர்க்கக் கூடாது.
நான் இப்படிப் பேசியதால் ஆயிரம் ரெளடிகளை அனுப்பினாலும் எனக்கு பயப்பட மாட்டேன்.காஞ்சிபுரத்தில் வைணவர்களின் தமிழ்மறைக்குப் பாதுகாப்புத் தந்தவர் அறிஞர் அண்ணா. நாத்திகம்பேசினாலும் திமுக ஆட்சி நடத்தியபோது ஆன்மீகத்தில் குறுக்கிடவே மாட்டார் கருணாநிதி.
ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் அவர் அமைதியாக இருந்தாலும் அவருக்கு கீழ் உள்ளவர்கள்தலையீடு மிக அதிகமாக உள்ளது. அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்பதை அனைவரும் உணரவேணடும் என்றார்.












Click it and Unblock the Notifications