தேர்தல் புயலில் இலை ஹைதராத்தில் போய் விழும்: ராமதாஸ்
செங்கல்பட்டு:
அடிக்கப் போகும் தேர்தல் புயலில் இரட்டை இலை ஹைதராபாத்தில் போய் விழும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
செங்கல்பட்டு தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை ஆதரித்து அச்சிறுப்பாக்கத்தில்ராமதாஸ் பேசியதாவது:
திமுக கூட்டணி கொள்கையுள்ள கூட்டணி. விவசாயிகள் வாழ்வுக்காகவும், சமூக நீதிக்காகவும்போராடும் கூட்டணி.
ஜெயலலிதா மக்களை மறந்து ரொம்ப நாளாச்சு. சுமார் 3 வருசம் ஆகிப் போச்சு. ஏழைகளுக்குவழங்கப்பட்ட நலத் திட்டங்களை அரசிடம் பணமில்லை என்று சொல்லி ரத்து செய்தஜெயலலிதாவுக்கு இப்போது கவனமெல்லாம் அந்தக் காசை வைத்து ஜார்ஜ் கோட்டையைஇடித்துவிட்டு ரூ. 2,000 கோடியில புதுசா கோட்டை கட்டுவது தான்.
அத்வானியை பிரதமராக்கணும், இந்தம்மா துணைப் பிரதமராகணும்னு ஆர்.எஸ்.எஸ். காவிக்கூட்டம் திட்டம் போட்டிருக்கிறது. அதற்காக வாஜ்பாய் முகமூடியைப் போட்டுக் கொண்டு ஓட்டுகேட்கின்றன பாஜகவும் அதிமுகவும்.
பா.ஜ.கவை விட, ஜெயலலிதாவை விட வன்முறையாளர்களை எங்கேயாவது பார்க்க முடியுமா?.பா.ஜ.கவுக்கு ஒரு அயோத்தி, குஜராத் என்றால் ஜெயலலிதாவுக்கு தர்மபுரி பஸ் எரிப்பு, டான்சிவழக்கறிஞரை தாக்கியது, வக்கீல் விஜயனை அடித்து துவட்டியது என அடுக்கிக் கொண்டேபோகலாம்.
கருணாநிதி, வைகோ போன்றவர்கள் தமிழர்களுக்காக சிறை சென்றார்கள். நானும் 15 முறை சிறைசென்றவன், மக்களுக்காக.
ஜெயலலிதா எதுக்கு சிறைக்குப் போனார்?. நாட்டு விடுதலைக்காகவா? ஊரார் சொத்தைகொள்ளையடித்த குற்றத்துக்காகத் தானே உள்ளே போனார்.
வரும் 10ம் தேதி வீசப் போகிற தேர்தல் புயலில் இரட்டை இலை பறந்து போய் ஹைதராபாத்தில்விழப் போகிறது. அப்புறம் 3 மாசம் கழிச்சுச் தான் தமிழ்நாட்டுக்கே வரும். ஜெயலலிதாவை ஓட,ஓட விரட்டும் தேர்தல் இது என்றார் ராமதாஸ்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications