அண்ணே.. இதுல என்ன எழுதியிருக்கு?
மதுரை:
மதுரை மக்களவைத் தொகுதியில் இந்து மகாசபையின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்குவந்துள்ள பிரச்சனை யாருக்கும் வரக் கூடாது.
ராமதாஸ் என்ற அந்த வேட்பாளருக்கு அவரது டெல்லி தலைமையகத்தில் இருந்து பிரச்சாரபோஸ்டர்கள், நோட்டீஸ்கள், கொடிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் முழுக்க, முழுக்க எல்லாம்இந்தியில் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறார் ராமதாஸ்.
மதுரையில் இந்தி பிட் நோட்டீஸ் கொடுத்து நான் எப்படி ஓட்டு கேட்பேன்.. என்று புலம்பும்ராமதாசுக்கே இந்தி தெரியாது என்பது முக்கியமான விஷயம்.
ஏங்க.. இதுல என்ன எழுதியிருக்கு என்று வழியில் போவோர், வருபவர்களிடம் எல்லாம்நோட்டீஸை நீட்டி படித்து விளக்கம் சொல்லச் சொல்லி தொல்லை தந்து கொண்டிருக்கும் ராமதாசுக்குமதுரை மக்களிடம் பதிலாகக் கிடைப்பது வடிவேலு ஸ்டைல் முறைப்பு மட்டுமே.
இது போதாதென்று இன்று நிருபர்களை சந்தித்தார் ராமதாஸ்.
உங்கள்ல யாராவது இதை படிச்சு சொல்லுங்களேன் என்று ராமதாஸ் நச்சரிக்க, அவர் கொடுத்தடீயைக் கூட குடிக்காமல் தப்பி ஓடினர் நிருபர்கள்.
மதுரையில் எந்த நிருபருக்கு இந்தி ஆத்தா ஹை?!
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications