வீடியோ மூலம் அதிமுகவுக்கு பதில் அளிக்கும் அய்யர்!
மயிலாடுதுறை:
காவிரிப் பிரச்சினையில் தான் ஆற்றிய பங்கு குறித்து விவரிக்கும் வீடியோ படத்தை மயிலாடுதுறை காங்கிரஸ்வேட்பாளர் மணிசங்கர் அய்யர் தயாரித்து தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் திரையிட உள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் மணிசங்கர் அய்யர் என்ன செய்தார் என்று அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியனும்,அதிமுகவினரும் போகும் இடமெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். காவிரி பாசனப் பகுதியானமயிலாடுதுறை மக்களிடையே இந்த கேள்வி அதிக விவாதத்தை எழுப்பி உள்ளது.
இதனால் காங்கிரஸ் வட்டாரம் சுதாரிப்படைந்துள்ளது. காவிரிப் பிரச்சினையில் மணிசங்கர் அய்யர்நாடாளுமன்றத்தில் ஆற்றிய விவாதங்கள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காவிரி தொடர்பான விவாதத்தில்கலந்து கொண்டது, பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் ஆகியவற்றை தொகுத்து வீடியோ படம் ஒன்றை அய்யர்தயாரித்துள்ளார். இதேபோல, விசிடி ஒன்றையும் அவர் தயாரித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் தான் ஆற்றிய பங்கை இந்த இரு வீடியோ படங்களும் தொகுதி மக்களுக்கு விவரிக்கும்,அதிமுகவின் கேள்விகளுக்கு பதிலாக அமையும் என்று அய்யர் தரப்பு கூறுகிறது. தொகுதிக்குட்பட்ட பல்வேறுகிராமங்களிலும் இவற்றை திரையிடப் போகிறார்கள்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications