உழைப்பாளர்களின் பாதுகாவலன் அதிமுக: ஜெயலலிதா
தூத்துக்குடி:
உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாவலனாக அதிமுக விளங்குகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமோதரனை ஆதரித்து தூத்துக்குடி அருகே உள்ளவீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் முதன்முதலில் சந்தித்த தேர்தல் களம் திருச்செந்தூர் இடைத் தேர்தல். 1983-ல் நடைபெற்ற அத் தேர்தலில்எனக்கு வெற்றி கிடைத்தது. இப்போதைய தேர்தலிலும் வெற்றிக்கனியை பரிசாகத் தருவீர்கள் என்பதில் எனக்குஐயம் இல்லை.
எத்தனை சூரர்கள் எதிர்த்து நின்ற போதிலும் அனைவரையும் முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த இடம்திருச்செந்தூர். எண்ணிக்கையில் சூரர்கள் எப்போதும் அதிகம் இருப்பார்கள் என்றாலும் இறுதி வெற்றிசத்தியத்துக்குத்தான். இதுதான் இந்த திருச்செந்தூர் மண் உணர்த்தும் செய்தி.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் தொழிலாளரைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில்நிறைவேற்றப்பட்டன. தொழிலாளரின் குழந்தைகள் தொழிலாளர்களாகவே இருந்து விடக்கூடாது என்பதற்காக,அவர்களுக்கென பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பப் பயிலகங்கள் ஆகியவற்றை அதிமுக அரசு அமைத்தது.
தொழிலாளர்களின் குடும்பங்களில் விளக்கேற்றும் இத்தகைய கல்விப் புரட்சியை திமுக அரசு செய்ததா?
உழைக்கும் மக்களின் அரசு அதிமுக அரசு. விவசாயிகள், பஞ்சாலைத் தொழிலாளர், நெசவாளர், மீனவர் மற்றும்இதர தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாவலனாக அதிமுக அரசு விளங்குகிறது என்று பேசினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications