குடிபோதையில் இருந்தாரா எஸ்.எஸ்.சந்திரன்?
சேலம்:
பெரும் கலாட்டா நடந்த சேலம் பிரச்சாரத்தின்போது நடிகரும் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரன்குடிபோதையில் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சேலம் கன்னங்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பிரசாரம்செய்தபோது ஏற்பட்ட பயங்கர மோதலில், காங்கிரஸ் கவுன்சிலர் பக்தவச்சலம், திமுகவைச் சேர்ந்த அய்யப்பன்,குபேந்திரன்), முனியப்பன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டும், கத்திக்குத்தும் விழுந்தது.
இந்த மோதல் தொடர்பாக எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் 10 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 147 (சட்டவிரோதமாக கூடுதல்), 148 (கலவரம் ஏற்படுத்துதல்), 327 (பயங்கர ஆயுதங்களால் சிறு காயம் ஏற்படுத்துதல்)மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுப்பட்டுள்ளது.
மேலும் எஸ்.எஸ்.சந்திரனின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த சென்னை அயனாவரத்தை சேர்ந்த செல்வராஜ்,சென்னை கே.கே.நகரை சேர்ந்த காஜா முஹமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷனுக்குப் பயந்து போலீசார் இந்த வழக்குகளைப் பதிவு செய்தனர்.
அதே போல எஸ்.எஸ்.சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திமுகவினர் 15 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும் திமுகவினர் யாரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை.
கன்னங்குறிச்சி பேரூராட்சி திமுக துணை தலைவர் சந்திரசேகரன், கன்னங்குறிச்சி போலீசாரிடம் இது தொடர்பாகஅளித்த புகாரில்,
திமுக தலைவைர் கருணாநிதியை, ஒற்றைக்கண் சிவராசன் என்றும் சொட்டையன் என்றும் எஸ்.எஸ்.சந்திரன்தரக்குறைவாக பேசினார். அப்போது நான் உள்ளிட்ட திமுகவினர் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து,ஏன் இப்படி தரக்குறைவாக பேசுகிறீர்கள் என்று எஸ்.எஸ்.சந்திரனிடம் கேட்டோம்.
அதற்கு அவர், பேசினால் என்னடா செய்வீங்க? என்கிட்ட 200 பேர் இருக்காங்க என்றபடியே, தனதுகூலிப்படையைப் பார்த்து, அவங்களை வெட்டிக் கொல்லுங்கடா, அவங்க தேர்தல் அலுவலகத்ததை தீவைத்துக்கொளுத்துங்கடா என்று ஆவேசமாகக் கூறினார்.
இதனையடுத்து கூலிப்படையினர் திமுக தேர்தல் அலுவலகத்துக்குள் புகுந்து பயங்கர ஆயதங்களால் தாக்கினர்.எஸ்.எஸ்.சந்திரன் ஒரு அரிவாளை எடுத்து குபேந்திரன் தலையில் இரண்டு முறை தாக்கினார். தாக்குதலுக்குப் பின்கூலிப்படையினர் தப்பி ஓடி விட்டனர் என்று புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் பயன்படுத்திய மூன்று சொகுசு கார்கள் (டி.என்.22-எஸ்4777, டி.என்.04-டி1944,டி.என்.10-எச் 0023) மற்றும் வீச்சரிவாள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சேலம் போலீஸ் கமிஷனர் சுனில்குமாரை அவரது வீட்டில் சந்தித்து எஸ்.எஸ்.சந்திரன் ஒரு புகார் மனு அளித்தார்.அந்தப் புகாரில், என்னையும் அதிமுகவினரையும் திமுகவினர் கடுமமையாகத் தாக்கினர். எங்கள் கார்களை அடித்துநொறுக்கினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கிடையே கலவரம் குறித்து உளவுப் பிரிவு போலீஸாரும், விஜிலென்ஸ் போலீசாரும் தனித்தனியாக அரசிடம்அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில், இங்கு பிரச்சாரம் செய்தபோது எஸ்.எஸ். சந்திரன் குடித்துவிட்டு புல் மப்பில் இருந்ததாகபோலீசார் கூறியுள்ளனர். குடிபோதையில் இருந்த எஸ்.எஸ்.சந்திரன், கருணாநிதியை மிகவும் தரக்குறைவாகபேசியதும், வெட்டுங்கடா குத்துங்கடா, தீவைத்துக் கொளுத்துங்கடா என்று பேசியதும் உண்மையே என்றுகுறிப்பிடப்பட்டடுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மோதலில் காயமடைந்த திமுகவினரை சேலம் மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம்நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந் நிலையில் இன்று நாமக்கலில் நடக்க இருந்த எஸ்.எஸ்.சந்திரனின் பிரசாரத்தை அதிமுக ரத்து செய்துவிட்டது.












Click it and Unblock the Notifications