For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் கன மழை: பாலம் உடைந்தது- பாறை உருண்டு பெண் பலி- கட்டடம் இடிந்து 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Heavy rain in Trichy
திருச்சியில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள புயல் சின்னம் வலுவடைந்துள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

Heavy rain in chennai

சென்னையில் பெய்த கன மழை
கொடைக்கானலில் கடும் மழை காரணமாக பாறைகள் உருண்டு வீட்டில் மேல் விழுந்ததில் ஒரு பெண் பலியானார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் கடும் மழையில் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து போர்டிகோவில்விழந்ததில் இரு கட்டட தொழிலாளர்கள் பலியாயினர்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் இடிந்தது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலானபகுதிகளில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூரில் காலை வரை 21 செ.மீ. மழை பெய்துள்ளது. அதே போல நாகப்பட்டினம் (130 மி.மீ.), பாம்பன்- (100மி.மீ.), அம்பாசமுத்திரம் மற்றும் செங்கல்பட்டு (70 மி.மீ.), சென்னை விமான நிலையம், திருவாரூர் மற்றும்மயிலாடுதுறை- (60 மி.மீ.), செம்பரம்பாக்கம், அதிராமபட்டினம், மன்னார்குடி (50 மி.மீ.),

தாம்பரம், பரங்கிப்பேட்டை, குடவாசல், தொண்டி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அறந்தாங்கி, தூத்துக்குடி,பாரூர், பாபநாசம், போளூர்- (40 மீ.மீ.), செங்குன்றம், துறையூர், கரூர்- (30 மி.மீ.) உள்ளிட்ட பகுதிகளில் கன மழைபெய்துள்ளது.

காரைக்காவில் அதிகபட்ச அளவாக 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பலத்த மழை பெய்வதால்நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சாலைகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் பாதரிதாசன் பல்கலைக்கழகத்துக்கு அருகே கட்டப்பட்ட புதியபாலம் மழையில் இடிந்து விழுந்தது. நேற்றிரவு இந்தப் பாலத்தில் இரு லாரிகள் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்தப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு சரிந்தது.

ஆனால், இரு லாரிகளும் இடிபாடுகளில் சிக்காமல் தப்பிவிட்டன. இந் நிலையில் பாலத்தைநெருங்கிய இன்னொரு பஸ் மணலில் சிக்கிக் கொண்டது. அந்த பஸ் கிரேன்கள் மூலம்மீட்கப்பட்டது. பாலம் இடிந்ததால் இந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விராலிமலைவழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

கட்டப்பட்ட ஒரே மாதத்தில், ஒரே மழையில் பாலம் இடிந்தது எப்படி என்பது, கமிஷன் அடித்தகரைவேட்டிகளுக்கே வெளிச்சம்.

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து, மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.பல இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 50 மி.மீ. மழையும், புழலேரி, சோழவரம் ஆகிய ஏரிகளில் தலா 30 மி.மீ. மழையும்பெய்துள்ளது. இந்த ஏரிகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இந்த ஏரிகளில்நீர் வரத்து அதிகரித்து, நீர் இருப்பு பெருக வாய்ப்புள்ளது.

Courtalam

குற்றாலத்தில் திடீர் சீசன்

கொடைக்கானல் பிளாகவை என்ற மலை கிராமத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததில் வீடு இடிந்துநொறுங்கியது.

இதில் அன்னக்கொடி (40) என்பவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்,மேலும் மூவர் காயமடைந்தனர்.

கனமழை காரணமாக திருக்கோவிலூர் பழகூர் பகுதியில் வீட்டின் மேல் தளம் இடிந்து போர்டிகோ பகுதியில்விழுந்ததில் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகன் (35), ஏழுமலை (32) ஆகிய இரு கட்டடதொழிலாளர்களும் பலியாயினர். விருத்தாசலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

அதே போல கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, திருச்சி,தூத்துக்குடி, கோவை மாவட்டங்களிலும், காவிரி டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால்விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புயல் சின்னம் வலுவடைந்துள்ளதையொட்டி, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கன மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் கொட்டத் தொடங்கியுள்ளது. இந்த திடீர் சீசனைஅனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி, ஐந்தரிவி, பழைய குற்றால அருவிஆகியவற்றுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இப் பகுதி பெய்து வரும் மழையால் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணையில் நீர் மட்டம் உயர்ந்துவருகிறது.

நீலகிரியில் கடும் மழை காரணமாக குளிர் அதிகமாகியுள்ளது. கோடை சீசனில் சுற்றுலா வந்தபயணிகள் குளிரில் நடுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மூடுபனியும் நிலவுவதால் வாகனப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X