சித்ரா பெளர்ணமி: காஞ்சி சித்ரகுப்தன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சித்ரா பெளர்ணமி தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்நடத்தப்பட்டன.
தென்னிந்தியாவிலேயே காஞ்சிபுரத்தில்தான் சித்ரகுப்தனுக்கு தனிக் கோவில் உள்ளது. சித்ரா பெளர்ணமி தினத்தன்றுதான்சித்ரகுப்தன் தனது புதுக் கணக்கை எழுதத் தொடங்குவதாக ஐதீகம் உள்ளது.
இதையடுத்து சித்ரகுப்தன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. சித்ரகுப்தன் திருக்கல்யாண வைபவம்நடந்தது. பின்னர் தம்பதி சமேதராக சித்ரகுப்தன் வீதி உலாவும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications