நாளை திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை
சென்னை:
மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம்நாளை காலை திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடக்கிறது.
நாளை காலை திமுவின் தலைமை செயற்குழுக் கூட்டமும் கூடுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன், பா.ம.க. நிறுவனர்டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன்,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.
இந் நிலையில் இன்று மாலை மதிமுகவின் உயர் நிலைக்குழுக் கூட்டம் நடக்கிறது.
மதிமுகவின் பாதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அக் கட்சியின் புதிய எம்.பிக்கள் 4பேரும் பங்கேற்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் வைகோஆலோசனை நடத்தவுள்ளார்.
மத்தியில் அமையும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என வைகோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் திமுகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை கூடுகிறது.ஆட்சியில் திமுக பங்கேற்க வேண்டும் என்ற சோனியா காந்தியின் கோரிக்கை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதில் புதிய எம்.பிக்கள் 15 பேரும் கலந்து கொள்கின்றனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications