கர்நாடகத்தில் அரசு அமைவதில் சிக்கல்
பெங்களூர்:
கர்நாடகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மோதல்வெடித்துள்ளது.
தாங்கள் அரசமைக்க ஜனதா தளம் ஆதரவளிக்க வேண்டும் என காங்கிரசும், நாங்களே ஆட்சி அமைப்போம்,அதற்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என ஜனதா தளமும் கோரியுள்ளன.
நேற்று டெல்லியில் சோனியாவை சந்தித்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கெளடா கூட்டணி அரசுகுறித்து பேச்சு நடத்தினார். காங்கிரசை ஆதரிக்கத் தயார் என்றும் அறிவித்தார்.
ஆனால், பெங்களூர் திரும்பிய அவர் இன்று தனது கட்சியின் புதிய எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது நாமே ஆட்சியமைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கோரினர். இதையடுத்து தங்களதுதலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என ஜனதா தளம் பல்டி அடித்துள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களைவென்ற பா.ஜ.க., ஜனதா தளத்தின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விருப்பம் காட்டியது.
ஆனால் காங்கிரசுடன் இணைந்து அல்லது அதன் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவே ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில், கர்நாடக விவகாரங்களுக்கான பா.ஜ.க. பார்வையாளர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம்பேசுகையில்,
காங்கிரஸ்- ஜனதா தளம் கூட்டணி ஒரு பொருத்தமில்லாத கல்யாணமாகும். வெகு விரைவில் மீண்டும் ஒருதேர்தலுக்கே இது வழி வகுக்கும். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் கட்சி உட்காரவே மக்கள் தீர்ப்பு கூறினார்கள்.
ஆனால் பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயல்கிறது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால்,எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜ.க. மகிழ்ச்சியுடன் அமரும் என்று கூறினார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications