இது கூட்டணிக்கு கிடைத்த 41வது வெற்றி: திமுக

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரத்து செய்யப்பட்ட பல்வேறு சலுகைகள், பறிக்கப்பட்ட பல்வேறு உரிமைகளை மீண்டும் வழங்குவதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளது, திமுக கூட்டணிக்குக் கிடைத்துள்ள 41வது வெற்றி என கருணாநிதி கூறியுள்ளார்.

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்குவது, பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது, அரசுஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது, இலவச மின்சாரத்தை மீண்டும் வழங்குவது உள்ளிட்டபல்வேறு அறிவிப்புகளை ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

இது குறித்து டெல்லியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,

புதிய அறிவிப்பு எதையும் ஜெயலலிதா வெளியிடவில்லை. ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டசலுகைகள், உரிமைகளை கடந்த 3 ஆண்டுகளாக ஒழித்துக் கட்டி விட்டு இப்போது தேர்தலில் படு தோல்விகிடைத்த பின்னர் மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போலாகும். 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது.ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புகள் திமுக கூட்டணிக்குக் கிடைத்துள்ள 41வது வெற்றியாகும்.

அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்ற முயலுகிறார் ஜெயலலிதா. ஆனால் மக்கள் இனிஏமாறவே மாட்டார்கள்.

மத்திய அமைச்சரவையில் திமுக, சேராததற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் மூத்த தலைவர்களுடன்விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.

மக்களுக்கு கிடைத்த வெற்றி: பாமக:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசின் தவறுகளை எதிர்க் கட்சியினர்சுட்டிக் காட்டியபோது அவர்களை கேவலப்படுத்தினார் முதல்வர் ஜெயலலிதா.

அவருக்கு பாடம் கற்பிக்க மக்கள் காத்திருந்தனர். தேர்தல் மூலம் அதை செய்து காட்டியும் விட்டனர். இதனால்அதிர்ச்சியடைந்துள்ள ஜெயலலிதா அந்தர் பல்டி அடித்துள்ளார். இது மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிஎன்று கூறியுள்ளார்.

மதிமுக:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவால் மக்கள் பட்ட கஷ்டங்களைஎந்தவிதமான அறிவிப்புகளாலும் துடைத்துவிட முடியாது என்று கூறியுள்ளார்.

சிபிஎம்:

தேர்தலில் பாடம் புகட்டியதன் மூலம் ஜெயலலிதாவை இறங்கி வரச் செய்த மக்களுக்கே இந்தவெற்றி உரித்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+