தமிழகத்தில் எம்பியான முன்னாள் ஐ.எப்.எஸ், ஐ.ஏ.எஸ்
சென்னை:
தமிழகத்திலேயே அதிக வயதான எம்.பி. திமுகவின் வட சென்னை எம்.பியான செ.குப்புசாமி தான்.
தமிழக மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
* தமிழகத்திலேயே அதிக வயதான எம்.பி. செ.குப்புசாமி. இவருக்கு வயது 77. 3-வது முறையாக வட சென்னைதொகுதி எம்.பியாகி உள்ளார். இவருக்கு அடுத்த மூத்தவர் திண்டுக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.பி.என்.எஸ்.வி.சித்தன். இவரது வயது 72.
* 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 7 பேர். 50 வயதைத் தாண்டியவர்கள் 14 பேர். 40 வயதுக்குக்குறைந்தவர்கள் 3 பேர் மட்டுமே. தயாநிதி மாறன் (37), சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (38), ராதிகா செல்வி (28)ஆகியோரே அவர்கள். ராதிகா செல்விதான் தமிழகத்திலேயே இளைய வயது எம்.பி ஆவார்.
* காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர அய்யர் முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி. அதேபோல அரக்கோணம் தொகுதிபாமக எம்.பி. வேலு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி.
* மொத்தமுள்ள 39 பேரில், 2 பேர் டாக்டர்கள். வழக்கம் போல வழக்கறிஞர்கள்தான் அதிகம், அவர்களதுஎண்ணிக்கை 9.
* 39 எம்.பிக்களில் 9 பேர் முன்னாள் மத்திய அமைச்சர்கள். இவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 4பேர். பாமக, திமுகவைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர். மதிமுகவைச் சேர்ந்தவர் ஒருவர்.
* 18 பேர் இப்போதுதான் முதல் முறையாக எம்.பி. ஆகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக திமுகவுக்குத்தான் 9புதுமுக எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். பாமக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் சார்பில் 3 பேரும், சிபிஐ சார்பில் 2 பேர்,சிபிஎம், மதிமுக சார்பில் தலா ஒருவரும் முதல் முறையாக எம்.பி. ஆகியுள்ளனர்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications