மத்திய அமைச்சராகிறார் அன்புமணி?
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தனது மகன் அன்புமணியை,மத்திய அமைச்சராக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணி அமைந்தபோதே பா.ம.கவுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி பதவி தர திமுக உறுதியளித்துள்ளது. இதையடுத்துஅடுத்த மாதம் நடக்கும் ராஜ்யசபா எம்.பி தேர்தலில் திமுக, பா.ம.க. இணைந்து அன்புமணியை எம்.பியாக்கலாம்என்று தெரிகிறது. இதனால் அவர் அமைச்சராகத் தொடர்வதில் சிக்கல் இருக்காது.
ராமதாஸின் அரசியல் வாரிசாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆனவர் டாக்டர் அன்புமணி. இருப்பினும்கட்சிப் பொறுப்பு எதுவும் இவருக்குக் கொடுக்கப்படவில்லை. மாறாக, கட்சி விவகாரங்கள் அனைத்தையும்மறைமுகமாக கையாண்டு வந்தார் அன்புமணி.
இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணியை நிறுத்த ராமதாஸ் முடிவு செய்தார். ஆனால், வாரிசுஅரசியல் நடத்துவதாக ராமதாஸ் மீது பிற வன்னிய சங்கங்கள் கடும் தாக்குதல் தொடுத்ததால், அன்புமணிபோட்டியிடவில்லை.
மாறாக, பாமக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அன்புமணியிடம் ஒப்படைத்தார் ராமதாஸ்.அன்புமணி தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் தான் தேர்தலில் நிறுத்தப்பட்டனர். ரஜினியின் எதிர்ப்பு, வன்னியர் சங்கஎதிர்ப்பையும் மீறி 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளதால் அன்பு மணிக்கு கட்சியினர் மத்தியில் மதிப்புகூடியுள்ளது.
இதைத் தொடர்ந்து அன்புமணியை கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந் நிலையில் மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் அன்பு மணிக்கும் அமைச்சர்பதவி வாங்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு கேபினட் மற்றும் 2 துணை அமைச்சர் பதவியை கேட்க பாமக திட்டமிட்டுள்ளது.அன்புமணி, புதுவை ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி ஆகியோரது பெயர்களை ராமதாஸ் முடிவு செய்து வைத்துள்ளதாககூறப்படுகிறது.
இவர்களில் அன்புமணிக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவியும் மற்ற இருவருக்கும்இணையமைச்சர் பதவி கேட்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூர்த்தியை அமைச்சராக்க ராமதாசுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அவருக்கு தமிழக மக்களிடையே மிக நல்லபெயர் உள்ளதாலும், அவரை விட்டுவிட்டு தனது மகனை மட்டும் அமைச்சராக்கினால் கட்சியின் பெயர் கெடும்என்பதாலும் ராமதாஸ் இறங்கி வந்துவிட்டதாகத் தெரிகிறது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications