சத்யநாராயண ராவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போஸ்டர் போர்!
மதுரை:
ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுத்து தேவையில்லாமல் அவரது செல்வாக்கைக் குறைத்து விட்ட ரசிகர் மன்றத்தலைவர் சத்யநாராயணா ராவ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி மதுரை ரசிகர்கள் சுவரொட்டிகள்ஒட்டி வருகின்றனர்.
பாமகவுக்கு எதிராக கிளம்பிய ரஜினிகாந்த், மக்களவைத் தேர்தலில் அக்கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால்சோர்ந்து போயுள்ளார். அவரை விட அவரை நம்பிய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் ரஜினியின் செல்வாக்கு அடியோடு சரிந்து விட்டதாகவும் செய்திகள்வெளியாவதால் ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.
இந் நிலையில் தங்களது கோபத்தை சத்யநாராயண ராவ் பக்கமாய் திருப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
ரஜினியின் இந்த நிலைக்குக் காரணமே ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ் தான் என்று மதுரை ரசிகர்கள்சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில், கண்ணீர் சிந்துகிறோம், இறைவா, தலைவர் ரஜினியை அரசியலில் சிக்க வைத்த மன்றத் தலைவர் ச(த்)திநாராயணாவை அகற்றி விடு, தலைவரை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று ஜக்குபாய் பட விளம்பர பாணியில்ஒட்டியுள்ளனர்.
அரசியலை விரும்பாத மதுரை மாவட்ட ரசிகர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளால்மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உண்மையிலேயே ரசிகர்கள்தான் ஒட்டினரா அல்லது வேறு யாரும் இதன் பின்னணியில் உள்ளனரா என்பதுகுறித்து ரசிகர் மன்றத் தலைமை விசாரணை நடத்தி வருகிறது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications