கிடப்பில் போடப்பட்டது புதிய தலைமைச் செயலக திட்டம்
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்ததைதமிழக அரசு ஒத்தி வைத்துவிட்டது.
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகம்மற்றும் சட்டசபை செயல்பட்டு வருகின்றன.
இந் நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார். இதற்காக முதலில்மகாபலிபுரம் செல்லும் சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் இடம் பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு கட்டுவதால்திட்ட மதிப்பு அதிகமாகும் என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
அயோத்திகுப்பம் மீனவ குடியிருப்பு பகுதியைக் காலி செய்து அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட தமிழகஅரசு தீர்மானித்தது. இதற்கு மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
பின்னர் மெரீனா கடற்கரையில் உள்ள ராணிமேரிக் கல்லூரியில் தலைமைச் செயலகம் கட்டுவது எனத்தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கல்லூரி மாணவிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் கடற்கரையோரமாக ரூ.50 கோடிக்கு மேல் திட்ட மதிப்புடைய கட்டடங்களைக் கட்ட மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று அப்போது மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுதடை விதித்தார்.
இதனால் ராணி மேரிக் கல்லூரியும் மீனவர் குப்பங்களும் தப்பின.
இந் நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் புதியதலைமைச் செயலகத்தைக் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டத்தையும் அரசுதள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், பெரும் செலவில் ஒரு புதிய தலைமைச் செயலகம்கட்டுவதால் மக்களிடம் அதிருப்தி அதிகமாகும் என்பதாலேயே இத் திட்டத்தை இப்போதைக்குசெயல்படுத்துவதில்லை என்று அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், அண்மையில் ஜெயலலிதா அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளால் ஏற்படும் நிதி நெருக்கடியைச்சமாளிக்கவே இத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications