துணை சபாநாயகராகிறார் எல்.கணேசன்
சென்னை:
மதிமுக அவைத் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பியுமான எல்.கணேசன் மக்களவை துணை சபாநாயகராகநியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும்பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளது.
இந் நிலையில் அமைச்சரவையிலும், ஆட்சியிலும் இடம்பெறாத ஒரே கட்சியாக மதிமுக மட்டுமே உள்ளது.இதனால் மதிமுகவுக்கும் ஏதாவது ஒரு பொறுப்பை கொடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கோரிக்கைவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை வைகோ ஏற்றுக் கொள்வார் என்று மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி எல்.கணேசன் துணை சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையில் சேர மாட்டோம்: வைகோ
இந் நிலையில் மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்ற முடிவில் மதிமுக உறுதியாக இருப்பதாக வைகோகூறியுள்ளார்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வி.பி.சிங், ஹர்கிஷன் சுர்ஜித் ஆகியோர் என்னிடம் மத்தியஅமைச்சரவையில் சேருமாறு வலியுறுத்தினர்.
ஆனால், கட்சியின் பொதுக்குழுவில், அமைச்சரவையில் சேருவதில்லை என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளதால், அமைச்சரவையில் சேர இயலாது என்று தெரிவித்தேன். அந்த முடிவில் எந்தமாற்றமும் இல்லை, மதிமுக அதில் உறுதியாக உள்ளது என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications