மத்திய நிதியமைச்சரானார் ப.சிதம்பரம்
டெல்லி:
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரோலியத்துறை அமைச்சராக மணிசங்கர் அய்யர்நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அதே போலவே திமுக தவிர்த்த பிற கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பிரதமர் டாக்டர் மன்மோகன் நேற்றிரவு தனது அமைச்சர்களுக்கான இலாகாக்களை அறிவித்தார்.
அதன் விவரம்:
1. ப.சிதம்பரம்- நிதியமைச்சர்
2. பிரணாப் முகர்ஜி- பாதுகாப்புத்துறை
3. சிவராஜ் பாட்டீல்- உள்துறை
4. அர்ஜூன் சிங்- மனிதவளத்துறை
5. லாலு பிரசாத் யாதவ்- ரயில்வேதுறை
6. எச்.ஆர்.பரத்வாஜ்- சட்டம் மற்றும் நீதித்துறை
7. நட்வர்சிங்- வெளியுறவுத்துறை
8. கமல்நாத்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
9. மணிசங்கர் அய்யர்- பெட்ரோலியத்துறை
10. தயாநிதி மாறன்- தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை
11. ராஜா- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
12. அன்புமணி- சுகாதாரத்துறை
13. ராம்விலாஸ் பாஸ்வான்- இரும்புத்துறை, உரம் மற்றும் ரசாயனத்துறை14. குலாம்நபி ஆசாத்- நாடாளுமன்ற விவகாரத்துறை
15. ஜெய்பால் ரெட்டி- தகவல்-ஒளிபரப்புத்துறை
16. டி.ஆர்.பாலு- சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை
17. சரத்பவார்- உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் விவசாயத்துறை
18. சிஸ்ராம் ஓலா- தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு
19. கண்டையா- மலைவாழ் மக்கள் மேம்பாடு, வடகிழக்கு மாகாண மேம்பாடு
20. மகாவீர் பிரசாத்- சிறுமொழில் மற்றும் கிராமப்புற வளர்ச்சி
21. சங்கர்சிங் வகேலா- ஜவுளித்துறை
22. மீரா குமார்- சமூகநீதித்துறை
23. சிபு சோரேன்- நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
24. சந்திரசேகர் ராவ்- கப்பல் போக்குவரத்து
25. பி.எம். சயீத்- மின்சாரத்துறை
26. பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி- நீர்வளத்துறை
27. சுனில்தத்- இளைஞர்நலம், விளையாட்டுத்துறை
தனிக் கட்சி நடத்தி வரும ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் பதவி தந்ததை தமிழக காங்கிரஸ் எதிர்த்து வந்தது. இந்நிலையில் அவரிடம் நிதித்துறையை வழங்கப்பட்டுள்ளதால்,சிதம்பரத்தின் முக்கியத்துவத்தை பல மடங்குஅதிகரித்துள்ளது.
நரசிம்ம ராவின் அமைச்சரவையில் மன்மோகன் சிங்கின் கீழ் நிதித்துறை இணையமைச்சராக சிறப்பாகப்பணியாற்றியவர் சிதம்பரம். இம் முறை மன்மோகன் சிங்கே நிதித்துறையையும் கவனிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால், அவரது வேலைப் பளுவைக் குறைக்கும் வகையில் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கின் தனிப்பட்டபரிந்துரை காரணமாக இந்த முக்கியமான பதவி சிதம்பரத்துக்கு கிடைத்துள்ளது.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications