அதிமுக ராஜ்யசபா எம்.பிக்கள் பலம் உயருகிறது
சென்னை:
ஜூன் மாதம் 21ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களைவை தேர்தலுக்குப் பின் அதிமுக எம்.பிக்களின்எண்ணிக்கை 12 ஆக உயர உள்ளது.
சமீபத்தில் நடந்த மக்களவைைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால்,மாநிலங்களவையில் (ராஜ்யசபா) அதிமுகவுக்கு 8 எம்.பிக்கள் உள்ளனர்.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த அக்னிராஜு, விடுதலை விரும்பி, சங்கரலிங்கம், சிவசுப்ரமணியம், எம்.ஏ.காதர்ஆகியோரும், அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
இதையடுத்து ஜூன் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போது தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுகவால் 4உறுப்பினர்களையும், திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும். ஒருவேட்பாளர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை.
சட்டசபையில் அதிமுகவின் பலம் 140, திமுக 30, காங்கிரஸ் 25, பாமக 19, சிபிஎம் 6, சிபிஐ 5. பாஜகவுக்கு 5எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
சுயேச்சை எம்.எல்.ஏக்களான அப்பாவு, அருள், செ.கு.தமிழரசன் ஆகியோரும், பார்வர்ட் பிளாக் உறுப்பினர்சந்தானமும் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடும்.
திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெறக் கூடிய 2 இடங்களில் ஒன்றில், பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், மத்தியஅமைச்சருமான டாக்டர் அன்புமணி போட்டியிடுகிறார். இதுதொடர்பாக திமுகவுக்கும், பாமகவுக்கும் ஏற்கனவேஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு இடத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம்.
மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் தற்போது 8 ஆக உள்ளது. இது 12 ஆக அதிகரிக்கவுள்ளது. திமுகவின்பலம் 6 ஆக இருக்கிறது, இது 2 ஆக குறையும்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications