மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மிஸ் ஆஸ்திரேலியா
குயிடோ:
2004-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெனீபர் (20) வென்றார்.
மிஸ் யுனிவர்ஸ் ஈகுவடார் நாட்டில் உள்ள குயிடோ நகரில் நடந்தது. இந்திய அழகி தனுஸ்ரீ தத்தா உட்பட 80க்கும்மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
தொடக்க சுற்றுப் போட்டிகள் கடந்த மாதம் 10ம் தேதி முதல் நடந்தன. இதில் இந்தியா, ஈகுவடார், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நார்வே, டிரினிடட் நாட்டு அழகிகள் முன்னிலை பெற்றனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் 80நாட்டு அழகிகளும் அணிவகுத்து வந்தனர். பின்னர் நீச்சல் உடையில் தனித்தனியே நடை பயின்றனர். 10அழகிகள் அரை இறுதிக்கு தேர்வானார்கள்.
அவர்களில் தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். ஆனால் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான 5 அழகிகள் பட்டியலில் தனுஸ்ரீதத்தாவால் இடம் பிடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போர்டோ ரிகோ, பராகுவே, டிரினிடட்நாட்டு அழகிகள் இறுதிச் சுற்றுக்கு வந்தனர்.
இறுதிச் சுற்றில் நடுவர்கள் கேட்டு கேள்விக்கு சிறப்பாக பதிலளித்து ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெனீபர்ஹாக்கின்ஸ் உலக அழகிப் பட்டத்தை வென்றார். ஜெனீபருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அமிலியா வேகா(டொமினிக்) கிரீடம் சூட்டினார்.
2-வது இடத்தை அமெரிக்க அழகி சந்திபின்னெசியும், 3-வது இடத்தை போர்டோரிகோ அழகி ஆல்பா ராயசும்,4-வது இடத்தை பராகுவே அழகி யானினாவும், 5-வது இடத்தை டிரினிடட் அழகி டானிலியும் பெற்றனர்.
இந்தப் போட்டியை சுமார் 8,000 பேர் நேரில் பார்த்தனர். உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர்தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications