இருப்பது ஒரு சீட், அதுக்கும் அடிதடி; இது காங். ஸ்டைல்!
சென்னை:
ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெறுவதில் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. இதில் 4 இடங்களில் அதிமுக வெற்றி பெறும். மீதம்உள்ள 2 இடங்களில் ஒரு சீட் பாமகவுக்கு ஒதுக்கப்படும். இன்னொரு சீட்டில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
காங்கிரஸூக்கான சீட்டைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தலில் சீட் கிடைக்காத பலரும்இப்போது மாநிலங்களவ சீட்டைப் பெற முட்டி மோதுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், திண்டிவனம் ராமமூர்த்தி,வசந்தகுமார் உள்ளிட்டோர் இதில் முக்கியமான போட்டியாளர்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவரின் ஆதரவைப் பெற்று அவர்கள் மூலம் சீட்டைப்பெற முயலுகின்றனர். ஒரேஒரு சீட்டுக்கு இத்தனை பேர் போட்டியா என்று காங்கிரஸ் மேலிடம் பயந்து போயுள்ளது.
இத்தனை பேர் முட்டி மோதினாலும் கூட, ஜெயந்தி நடராஜனுக்கே சீட் கிடைக்கும் என்று தெரிகிறது. அவரதுஅனுபவம், சோனியா காந்தியிடம் அவருக்குள்ள செல்வாக்கு, ஜி.கே.வாசனின் ஆதரவு ஆகியவை அவருக்குதச்சாதகமாக உள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications