திருச்சி: மாருதி - லாரி மோதலில் 3 பேர் பலிதிருச்சி: திருச்சி அருகே சிறுகனூர் என்ற இடத்தில் மாருதி வேன் ஒன்று டேங்கர் லாரியுடன் நேருக்கு நேராக மோதியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பலியாயினர்.திருச்சி அரியலூரைச் சேர்ந்தவர் நடேசன். இவர் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மாருதி வேனில் திருச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி அருகே சிறுகனூர் என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது மாருதி வேன் மோதியது. இந்த விபத்தில் மாருதி வேன் டிரைவர் ராஜசேகர், நடேசனின் மகள் ஜெயகாந்தி, சுபாஷினி ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பலியாயினர். இதில் சுபாஷினி ஒன்றரை வயதுக் குழந்தையாகும். நடேசன் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே சிறுகனூர் என்ற இடத்தில் மாருதி வேன் ஒன்று டேங்கர் லாரியுடன் நேருக்கு நேராக மோதியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பலியாயினர்.
திருச்சி அரியலூரைச் சேர்ந்தவர் நடேசன். இவர் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மாருதி வேனில் திருச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி அருகே சிறுகனூர் என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது மாருதி வேன் மோதியது.
இந்த விபத்தில் மாருதி வேன் டிரைவர் ராஜசேகர், நடேசனின் மகள் ஜெயகாந்தி, சுபாஷினி ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பலியாயினர். இதில் சுபாஷினி ஒன்றரை வயதுக் குழந்தையாகும். நடேசன் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications