பா.ஜ.கவின் விஷம பிரசாரம்: கம்யூ. தலைவர் குற்றச்சாட்டு
சென்னை:
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு 5 ஆண்டு காலம் பதவியில் நீடிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள்அனுமதிக்காது என்று விஷமத்தனமான பிரசாரத்தை பாரதீய ஜனதாக் கட்சி மேற்கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மக்களிடையே பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது பாஜக. காங்கிரஸ் கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு கம்யூனிஸ்டுகள் இடையூறாக இருப்பார்கள் என்பதே அவர்களது விஷமத்தனமான பிரசாரம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும், இதில் சந்தேகமே இல்லை.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் அமைச்சர்களாகக் கூடாது என்று பாஜக கூறுவது அதன் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அத்வானியை அருகில் வைத்துக் கொண்டு அவர்கள் இவ்வாறு கூறுவது கேலிக் கூத்தாக உள்ளது.
காங்கிரஸ் அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலையிடாது. அதேசமயம், மனிதாபிமானத்துடன் அவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஏழைகளுக்கும், மக்களுக்கும் தோழமையான வகையில் பட்ஜெட் அமைய விரும்புகிறோம் என்றார் அவர்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications