திண்டிவனம் அருகே இரு லாரிகள் மோதல்: 12 பேர் பலி-78 பேர் காயம்திண்டிவனம்:திண்டிவனம் அருகே நேற்றிரவு நடந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது இன்னொரு டிப்பர் லாரி மோதியதில் 5 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். 78 பேர் படுகாயமடைந்தனர்.திண்டிவனம் அருகே உள்ள உப்புவேலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் சுமார் 90 பேர் தனியார் பேருந்தில் வேலூர் அருகே உள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாக்கல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, அங்கிருந்த ஏரியில் பாய்ந்து கவிழ்ந்தது.இதில் 90 பேரும் காயமடைந்தனர். இவர்களை பெருமாக்கல் கிராம மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு, அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரியில் ஏற்றி விட்டனர்.அந்த டிப்பர் லாரி மானூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த இன்னொரு டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்தவர்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் டயர்களில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.படுகாயமடைந்த 80 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். 12 பேர் ஒரே விபத்தில் இறந்ததால், திண்டிவனம் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே நேற்றிரவு நடந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மீது இன்னொரு டிப்பர் லாரி மோதியதில் 5 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியானார்கள். 78 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம் அருகே உள்ள உப்புவேலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் சுமார் 90 பேர் தனியார் பேருந்தில் வேலூர் அருகே உள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாக்கல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, அங்கிருந்த ஏரியில் பாய்ந்து கவிழ்ந்தது.
இதில் 90 பேரும் காயமடைந்தனர். இவர்களை பெருமாக்கல் கிராம மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு, அந்த வழியாகச் சென்ற டிப்பர் லாரியில் ஏற்றி விட்டனர்.
அந்த டிப்பர் லாரி மானூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த இன்னொரு டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்தவர்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் டயர்களில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
படுகாயமடைந்த 80 பேர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை இறந்தனர். மற்றவர்களின் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.
இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். 12 பேர் ஒரே விபத்தில் இறந்ததால், திண்டிவனம் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications