பாலகிருஷ்ணா சிறையில் அடைப்பு
ஹைதராபாத்: சினிமா தயாரிப்பாளரையும், அவரது நண்பரையும் துப்பாக்கியால் சுட்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நீதிமன்றக் காவலில் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் மகனான பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது வீட்டுக்கு வந்த படத் தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் அவரது நண்பரான ஜோதிடர் சத்யநாராயணா ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டார்.
காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக பாலகிருஷ்ணாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதம் வைத்து இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவரை ஹைதராபாத் பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினார்கள். நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், அதுவரை மருத்துவமனையில் சேர்க்குமாறும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து பாலகிருஷ்ணா மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந் நிலையில் இன்று மீண்டும் மாஜிஸ்திரேட் காந்தி முன் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணா. அப்போது அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வரும் 21ம் தேதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
தன்னை சுரேசும் ஜோதிடரும் கத்தியால் குத்தியதால், பாதுகாப்புக்காக சுட்டதாக பாலகிருஷ்ணா கதை விட்டுள்ளார். இதை குண்டடி பட்ட தயாரிப்பாளரும் ஜோதிடரும் மறுத்துள்ளனர். போதையில் பாலகிருஷ்ணா தங்களை கண்மூடித்தனமாக சுட்டதாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தயாரிப்பாளரை சுட்ட பாலகிருஷ்ணா
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications