தமிழக ரத்த வங்கிகளை கம்ப்யூட்டர் மூலம் இணைத்து நெட்வோர்க் உருவாக்க திட்டம்சென்னை:தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகளை கம்யூட்டர்கள் மூலம் ஒருங்கிணைத்து நெட்வொர்க்கை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருப்பவரும், அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பெற முடியும்.இந்த முயற்சியை தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள இருக்கிறது.இதன் முதல்கட்டமாக சென்னை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சாவூர் ரத்த வங்கிகள் ஆகியவை கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் கொண்டு வரப்படவுள்ளன.எந்த வங்கியில் எந்த வகை ரத்தம் இருப்பு உள்ளது, எந்த வகை ரத்தம் உடனடியாகத் தேவைப்படுகிறது, ரத்தம் தந்தவர் யார், அந்த குரூப், ரத்தம் தர தயாராக உள்ளவர்களின் விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.இதனால் வேண்டிய குரூப் ரத்தத்தைப் பெற கொடையாளியை உடனடியாக தொடர்பு கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.இந்த நெட்வோர்க் மூலமாக சில ரத்த வங்கிகளில் அளவுக்கதிகமான ரத்தம் சேமிக்கப்பட்டு, அது வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.இந்த நெட்வோர்க்கின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ரத்த வங்கிகளும் படிப்படியாக ஒன்றிணைக்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:
தமிழகத்தில் உள்ள ரத்த வங்கிகளை கம்யூட்டர்கள் மூலம் ஒருங்கிணைத்து நெட்வொர்க்கை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருப்பவரும், அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் பெற முடியும்.
இந்த முயற்சியை தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள இருக்கிறது.
இதன் முதல்கட்டமாக சென்னை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சாவூர் ரத்த வங்கிகள் ஆகியவை கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் கொண்டு வரப்படவுள்ளன.
எந்த வங்கியில் எந்த வகை ரத்தம் இருப்பு உள்ளது, எந்த வகை ரத்தம் உடனடியாகத் தேவைப்படுகிறது, ரத்தம் தந்தவர் யார், அந்த குரூப், ரத்தம் தர தயாராக உள்ளவர்களின் விவரம், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.
இதனால் வேண்டிய குரூப் ரத்தத்தைப் பெற கொடையாளியை உடனடியாக தொடர்பு கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.
இந்த நெட்வோர்க் மூலமாக சில ரத்த வங்கிகளில் அளவுக்கதிகமான ரத்தம் சேமிக்கப்பட்டு, அது வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
இந்த நெட்வோர்க்கின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ரத்த வங்கிகளும் படிப்படியாக ஒன்றிணைக்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications