பொறியியல் கல்லூரி கட்டணம்: நீதிபதி ராமன் மீது ராமதாஸ் பாய்ச்சல்சென்னை: பொறியியல் கல்லூரிக் கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி ரூ. 32,500 ஆக நிர்ணயித்துள்ளதற்கு பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏழை மாணவ, மாணவிகள் கடுமையாகபாதிக்கப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் கல்லூரி கட்டணத்தை ராமன் கமிட்டிஉயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டே, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் தாறுமாறாகவசூலிக்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோர்களும் கூறினர்.மேலும், ஆயிரக்கணக்கான மாணவர் இடங்கள் கடுமையான கட்டண உயர்வினால் காலியாகக் கிடந்தன. இந்நிலையில் கட்டணத்தை மேலும் உயர்த்தியிருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த சமூகத்தைச் சேர்ந்தமாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நேரத்தில் அதை உயர்த்தியிருப்பது தனியார் பொறியியல் கல்லூரிகளுக்குமிகவும் வசதியாகப் போய் விடும்.எனவே, ராமன் கமிட்டி பரிந்துரையை நிராகரித்து விட்டு சமூக நீதியில் அக்கறை கொண்ட ஒருவர் தலைமையில்புதிய குழுவை அமைத்து கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
சென்னை:
பொறியியல் கல்லூரிக் கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி ரூ. 32,500 ஆக நிர்ணயித்துள்ளதற்கு பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏழை மாணவ, மாணவிகள் கடுமையாகபாதிக்கப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் கல்லூரி கட்டணத்தை ராமன் கமிட்டிஉயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டே, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் தாறுமாறாகவசூலிக்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோர்களும் கூறினர்.
மேலும், ஆயிரக்கணக்கான மாணவர் இடங்கள் கடுமையான கட்டண உயர்வினால் காலியாகக் கிடந்தன. இந்நிலையில் கட்டணத்தை மேலும் உயர்த்தியிருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த சமூகத்தைச் சேர்ந்தமாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நேரத்தில் அதை உயர்த்தியிருப்பது தனியார் பொறியியல் கல்லூரிகளுக்குமிகவும் வசதியாகப் போய் விடும்.
எனவே, ராமன் கமிட்டி பரிந்துரையை நிராகரித்து விட்டு சமூக நீதியில் அக்கறை கொண்ட ஒருவர் தலைமையில்புதிய குழுவை அமைத்து கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications