அதிமுகவை சரித்திரம் மன்னிக்காது: ராமதாஸ்
சென்னை:
காவிரி நதி நீர் விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தவறினால், அதிமுகவை சரித்திரம் மன்னிக்காது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியே முதல்வர் ஜெயலலிதா அனைத்து நடவடிக்கையையும் எடுத்தார் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கூட்டப்பட்டதா? மத்திய அரசு நியமித்த காவிரி நதி நீர் ஆணையத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கையொட்டி ஆணையத்தைப் பற்றியும் பிரதமரை பற்றியும் ஜெயலலிதா கடுமையான கருத்துக்களை வெளியிட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி சொன்னதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இரு மாநில முதல்வர்களும் கடிதங்கள் மூலம் மோதல் நடத்தினர். இதனால் தான் காவிரி நதி நீர் ஆணையத்தை திட்டமிட்டப்படி கூட்ட முடியவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியது.
ஆணையம் வேண்டாம், அதை திருத்தி அமைக்கப்படவேண்டும் என்று அதிமுக வாதிடுவதற்கு காரணம், அது முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பு என்பதேயாகும்.
ஆனால் அதனை தமிழக மக்களின் கருத்து என்று தெரிவிப்பது தவறு. தமிழகத்தின் கருத்து என்று தெரிவிப்பதற்கு முன் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி விவாதித்திருக்க வேண்டாமா?
அதிமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகளினால்தான் நிலைமை சிக்கலாகிவிட்டது.
எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் குரல் இப்போது டெல்லியில் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் அதிமுகவை சரித்திரம் மன்னிக்காது என்று கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications