அயோத்தி: இஸ்லாமிய அமைப்புடன் துவாரகை சங்கராச்சாரியார் பேச்சுஅயோத்தி:முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த், அமைப்பின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற துவாரக மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சுவாமிகள், அயோத்தி விவகாரம் குறித்து பேச்சு நடத்தினார்.மூத்த இந்து மதத் தலைவர் ஒருவர் முக்கிய இஸ்லாமிய அமைப்புக்கு நேரில் செல்வது இதுவே முதல் முறையாகும்.டெல்லியில் உள்ள ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த் அமைப்புக்கு முதல் முறையாக வருகை தந்த சுவாமிகள், அயோத்தி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பேச்சுவார்த்தை மூலம் தான் நிரந்தர தீர்வு காண முடியும். இதில் நீதிமன்றத் தீர்வு சரியாக வராது.முஸ்லீம் விரோத எண்ணங்களை அடிப்படையாக வைத்து கோவில் கட்ட நாங்கள் விரும்பவில்லை. அதே போல இந்து விரோத எண்ணங்களின் அடிப்படையில் மசூதி கட்டுவதையும் விரும்பவில்லை.ஏற்கனவே நடந்து வரும் அயோத்தி பேச்சுவார்த்தையில் முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த்தும் பங்கேற்க வேண்டும் என்றார்.ஆனால், இந்தக் கோரிக்கையை ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த் ஏற்றதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் தங்களைத் தேடி வந்து பேசிய துவாரக மட சங்கராச்சாரியாருக்கு தாங்கள் பெரும் நன்றிக் கடன் பட்டிருப்பதாக அந்த இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது.அவரது செயல் மிகவும் போற்றத்தக்கது என்றும் கூறியுள்ளது.பேசித் தீர்க்க முடியாது: வி.எச்.பிஇந் நிலையில் அயோத்தி பிரச்சனையை பேச்சுவார்த்தை தீர்க்க முடியாது என விஸ்வ இந்து பரிஷத் கருத்து தெரிவித்துள்ளது.அயோத்தியில் நடந்த பஜ்ரங் தள் அமைப்பினரின் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வி.எச்.பியின் இணைச் செயலாளர் ஓம்கர் பாவே நிருபர்களிடம் பேசுகையில்,பேச்சுவார்த்தைகளால் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவது கஷ்டமே. காரணம், அதற்கு முஸ்லீம் அமைப்புகள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கும்.இந்த விவகாரத்தைத் தீர்ப்பதில் மத்தியில் அமைந்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு எப்படி செயல்படுகிறது என்பதை ஒரு வருடம் பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை அயோத்தியில் கோவில் கட்டும் இயக்கத்தை வலுப்படுத்துவோம்.சாதுக்கள், மகான்கள், இந்து மதத் தலைவர்களின் வழிகாட்டுதலோடு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.
அயோத்தி:
முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த், அமைப்பின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற துவாரக மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சுவாமிகள், அயோத்தி விவகாரம் குறித்து பேச்சு நடத்தினார்.
மூத்த இந்து மதத் தலைவர் ஒருவர் முக்கிய இஸ்லாமிய அமைப்புக்கு நேரில் செல்வது இதுவே முதல் முறையாகும்.
டெல்லியில் உள்ள ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த் அமைப்புக்கு முதல் முறையாக வருகை தந்த சுவாமிகள், அயோத்தி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பேச்சுவார்த்தை மூலம் தான் நிரந்தர தீர்வு காண முடியும். இதில் நீதிமன்றத் தீர்வு சரியாக வராது.
முஸ்லீம் விரோத எண்ணங்களை அடிப்படையாக வைத்து கோவில் கட்ட நாங்கள் விரும்பவில்லை. அதே போல இந்து விரோத எண்ணங்களின் அடிப்படையில் மசூதி கட்டுவதையும் விரும்பவில்லை.
ஏற்கனவே நடந்து வரும் அயோத்தி பேச்சுவார்த்தையில் முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த்தும் பங்கேற்க வேண்டும் என்றார்.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஜமாத்-ஐ-உலேமா-இ- ஹிந்த் ஏற்றதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் தங்களைத் தேடி வந்து பேசிய துவாரக மட சங்கராச்சாரியாருக்கு தாங்கள் பெரும் நன்றிக் கடன் பட்டிருப்பதாக அந்த இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது.
அவரது செயல் மிகவும் போற்றத்தக்கது என்றும் கூறியுள்ளது.
பேசித் தீர்க்க முடியாது: வி.எச்.பி
இந் நிலையில் அயோத்தி பிரச்சனையை பேச்சுவார்த்தை தீர்க்க முடியாது என விஸ்வ இந்து பரிஷத் கருத்து தெரிவித்துள்ளது.
அயோத்தியில் நடந்த பஜ்ரங் தள் அமைப்பினரின் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வி.எச்.பியின் இணைச் செயலாளர் ஓம்கர் பாவே நிருபர்களிடம் பேசுகையில்,
பேச்சுவார்த்தைகளால் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவது கஷ்டமே. காரணம், அதற்கு முஸ்லீம் அமைப்புகள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கும்.
இந்த விவகாரத்தைத் தீர்ப்பதில் மத்தியில் அமைந்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு எப்படி செயல்படுகிறது என்பதை ஒரு வருடம் பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை அயோத்தியில் கோவில் கட்டும் இயக்கத்தை வலுப்படுத்துவோம்.
சாதுக்கள், மகான்கள், இந்து மதத் தலைவர்களின் வழிகாட்டுதலோடு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications