கடந்தது ஜூலை 12: நான்காவது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூர் அணை
சேலம்:
இயற்கையின் வஞ்சம், கர்நாடகத்தின் பிடிவாதம் ஆகியவற்றின் காரணமாக மேட்டூர் அணை தொடர்ந்து 4-வது ஆண்டாக நேற்று திறக்கப்படவில்லை.
காவிரி பாசனப் பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மேட்டூர் அணை இந்தத் தேதியில் திறக்கப்படவில்லை.
போதிய பருவ மழை இல்லாதது, கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது ஆகிய காரணங்களினால் கடந்த 3 ஆண்டுகளாக மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்க முடியவில்லை. அதே நிலை இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதியான நேற்று, அணை மூடப்பட்டிருந்தது. இதனால் 4-வது ஆண்டாக அணை திறக்கப்படாமல் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
மேட்டூர் அணையில் தற்போது வெறும் 25 அடி தண்ணீர்தான் உள்ளது. மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு நீர் வரத்தும் அதிகம் இல்லை. விநாடிக்கு 1,000 கன அடி நீர் என்ற அளவில்தான் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணை 4-வது ஆண்டாக திறக்கப்படாததால், குறுவை பயிரை சாகுபடி செய்வது குறித்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்த ஆண்டும் குறுவைப் பயிர் பாதிக்கப்படும் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.
மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விடச் செய்தால் மட்டுமே குறுவைப் பயிரைக் காக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் உள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications