எம்.பி, எம்.எல்.ஏக்களை எழுந்து நின்று வரவேற்க அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை:
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அதிகாரிகளை சந்திக்க வரும்போது அவர்களை எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களுடன் சரியாக ஒத்துழைக்காத அதிகாரிகளும் ஒரு காரணம் என்று புகார் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவினரின் சிபாரிசுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை, இதனால் கட்சியினர் சரியாக தேர்தல் வேலை பார்க்கவில்லை என்று பரவலான புகாரும், தங்களைக் கூட அதிகாரிகள் மதிப்பதில்லை என்று எம்.பி., எம்.எல்.ஏக்களும் அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாநில பணியாளர் நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு பல புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* எம்.பி, எம்.எல்.ஏக்கள் வரும்போது அவர்களுக்கு உரிய மரியாதை தர
வேண்டும். அவர்களை எழுந்து நின்று வரவேற்க வேண்டும், கிளம்பும்போது
எழுந்து நின்று அனுப்பி வைக்க வேண்டும்.
* மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து,
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது மக்கள் நலப் பணிகளை நிறைவேற்ற
அதிகாரிகள் முடிந்தவரை ஒத்துழைப்பு தர வேண்டும். முடியாத பட்சத்தில்
அதற்கான காரணத்தை அந்த உறுப்பினருக்குத் தெரிவிக்க வேண்டும்.
* முன் கூட்டியே நேரம் பெறாமல் வந்தாலும் எம்.பி., எம்.எல்.ஏக்களை
அதிகாரிகள் சந்திக்க வேண்டும்.
* அரசு நிகழ்ச்சிகளில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அமர்வதற்கான இடங்களை
அதிகாரிகள் சரியாக ஒதுக்க வேண்டும்.
* அவர்களது கடிதங்களுக்கு இரு வாரங்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும்.
* தங்கள் சொந்தப் பிரச்சனைகளுடன் (டிரான்ஸ்வர், பதவி உயர்வு) போய்
எம்.பி, எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் அணுகக் கூடாது.
இவ்வாறு பல விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்











Click it and Unblock the Notifications